அதிமுக வழக்கு: இன்னும் அசல் வழக்கு நிலுவையில் தான் இருக்கு: ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர்

அதிமுக பொதுக்குழு வழக்குகளுக்கு எதிரான ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் இன்னும் அசல் வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 25, 2023, 01:54 PM IST
  • அதிமுக பொதுக்குழு தீர்மான வழக்கு
  • ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் பின்னடைவு
  • மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி
அதிமுக வழக்கு: இன்னும் அசல் வழக்கு நிலுவையில் தான் இருக்கு: ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் title=

அதிமுகவில் இருந்து தன்னை நீக்கியது செல்லாது என அறிவிக்கக்கோரியும், பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரியும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்றத்தை நாடியது. ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்ச்சியாக பின்னடைவை சந்தித்து வந்த ஓபிஎஸ் தரப்பு, இந்த வழக்கை தான் நம்பி கொண்டிருந்தது. ஆனால், இப்போது அந்த வழக்குகளையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருப்பதால் அரசியல் ரீதியாக பெரும் பின்னடைவை மீண்டும் சந்தித்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் என்றும் உத்தரவு வந்திருப்பதால், அவர் இனி அதிமுக கொடி உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. 

இருப்பினும் இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் மேல்முறையீட்டு வழக்குகள் மட்டுமே தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகவும் அசல் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து வலுவான வாதங்களை எடுத்து வைத்து தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெறுவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  கடந்த ஆண்டு ஜூலை 11இல் நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழு நிறைவேற்றப்பட்ட நீக்க தீர்மானங்கள், பொது செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்க கோரி ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஜெ.சி.டி.பிரபாகர் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை நிராகரித்து மார்ச் 28ஆம் தேதி நீதிபதி கே.குமரேஷ்பாபு உத்தரவிட்டிருந்தார்.

மேலும் படிக்க | அதிமுக பொதுக்குழு விவகாரம்: ஓபிஎஸ் வழக்குகள் தள்ளுபடி... உடனே பிரஸ்மீட்டில் பேசிய இபிஎஸ்!

அவரது தீர்ப்பில், பொதுக்குழு செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளதால், 2 ஆயிரத்து 460 பொதுக்குழு உறுப்பினர்களும் ஏகமனதாக நிறைவேற்றிய தீர்மானங்களும் செல்லுபடியாகக் கூடியவையே என தெளிவுபடுத்தி இருந்தார். அதன்படி பொதுச்செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வந்த தீர்மானமும், இடைக்கால பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்த தீர்மானங்களும் செல்லும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். உறுப்பினர் நீக்கத்திற்கு ஏழு நாட்களுக்கு முன்னர் நோட்டீஸ் கொடுக்க வேண்டும் என்கிற விதி மீறப்பட்டுள்ளதால், ஒபிஎஸ் உள்ளிட்டோரை கட்சியில் இருந்து நீக்கம் செய்த சிறப்பு தீர்மானத்தை பொறுத்தவரை பிரதான வழக்கில் தான் தீர்மானிக்க முடியும் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஒபிஎஸ் உள்ளிட்டோர் உடனடியாக மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தனர்.  இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அமர்வு, கடந்த ஏப்ரல் 20இல் தொடங்கிய முதல் நாள் விசாரணை,  ஏப்ரல் 21, ஏப்ரல் 24, ஜூன் 9, ஜூன் 12, ஜூன் 15 ஆகிய தேதிகளில் அனைத்து தரப்பு வாதங்களும் முன்வைக்கபட்டன. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் தள்ளிவைத்தனர்.

அதன்படி இந்த மேல்முறையீட்டு வழக்குகளில் இன்று (ஆக. 25) தீர்ப்பளித்த நீதிபதிகள்,  பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்த தனி நீதிபதி உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி, கட்சியில் இருந்து பன்னீர்செல்வம் உள்ளிட்டோரை நீக்கி நிறைவேற்றப்பட்ட சிறப்பு தீர்மானம் உள்ளிட்ட தீர்மானங்களுக்கு தடை விதிக்க மறுத்து, பன்னீர்செல்வம் உள்பட நான்கு பேர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

இந்த தீர்ப்புக்குப் பிறகு பேசிய ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் திருமாறன், " பொது குழு நடைபெற்றது செல்லும். ஆனால் பொது குழு தீர்மானதுக்கு எதிரான பரிகாரங்கள் பெற்று கொள்ளலாம் என என கூறப்பட்டு இருந்தது. மேல்முறையிட்டு மனுக்கள் தான் தள்ளுபடி செய்யப்படுள்ளது. அசல் வழக்கு நிலுவையில் உள்ளது. அங்கு போதிய வாதங்களை முன் வைப்போம். இந்த இடையீட்டு மனுக்கள் தீர்ப்பு குறித்து உச்ச நீதிமன்றத்தை நாட உள்ளோம்" என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | கொடநாடு கொலை வழக்கில் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்க வேண்டும்- தனபால் பரபரப்பு பேட்டி

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News