ஆடி தபசு என்பது ஆதிசக்தி கோமதியம்மனாக தவமிருந்த நிகழ்வினைக் குறிக்கும் திருவிழாவாகும். இந்த திருவிழா ஆடி மாதம் சங்கரநாராயணன் கோயிலில் கொண்டாடப்படுகிறது. சிவபெருமானை அடைய ஊசிமுனையில் அம்பாள் கடும் தவம் இருந்த நன்னாளே ஆடித்தபசு. தபசு என்றால் தவம், தபஸ் என்று பொருள். ஆடித்தபசு திருவிழா எல்லா சிவ தலங்களிலும் திருக்கோயில்களில் கொண்டாடப்பட்டாலும், ஆடித்தபசு என்றதும் நம் நினைவுக்கு வருவது சங்கரன்கோவில். இங்கு பல திருவிழா சிறப்பாக நடைபெற்றாலும், ஆடித்தபசு கோலாகலமாக நடைபெறும்.
அந்த நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உலகப் புகழ்பெற்ற சிவஸ்தலங்களுள் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயண சுவாமி சமேத கோமதி அம்பாள் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடித்தபசு பெருந்திருவிழா கொண்டாடுவது வழக்கம். அதன்படி கோடிக்கணக்கான மக்கள் கொண்டாடும் இந்த ஆடித்தபசு திருவிழாவானது கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக ஆகம விதிகளின்படி திருக்கோவிலின் உட்பிரகார வீதிகளில் கொண்டாடப்பட்டது.
மேலும் படிக்க | ஆடிப்பெருக்கு அன்று வாங்க வேண்டிய 'முக்கிய' பொருட்கள்
இந்த நிலையில் இந்த விழாவின் முக்கிய நிகழ்வுகளான திருத்தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. மேலும் ஆடித்தபசு திருத்தேரில் ஸ்ரீகோமதிஅம்பாள் வீற்றிருந்து நான்கு ரத வீதிகளிலும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார் மேலும் இந்த திருத்தேரோட்டத்தை தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ராஜா, சங்கரன்கோவில் நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் ஆகியோர் தேரை வடம் பிடித்து இழுத்து வைத்து தொடங்கி வைத்தனர். மேலும் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தும் தடி போட்டும் சுவாமி தரிசனம் செய்தனர்.
சிகர நிகழ்ச்சியான தபசு காட்சி வருகிற 10 ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு மேல் நடைபெறும் எனவும் இரவு காட்சி 12:00 மணிக்கு இம்தா காட்சி நடைபெறும் எனவும் திருக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அத்துடன் வருகிற 10 ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த அற்புத நாளில் யாரெல்லாம் வழிபாடு, பிரார்த்தனை செய்கின்றனரோ அவருக்கு சிவபெருமானின் பூரண அருள் கிடைக்கும். என்பது ஐதீகம்.
மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ