INDvsNZ: கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: பிசிசிஐ

இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 23, 2019, 08:48 PM IST
INDvsNZ: கடைசி 2 ஒருநாள் போட்டிகள் மற்றும் டி20 தொடரில் விராட் கோலிக்கு ஓய்வு: பிசிசிஐ title=

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு, தற்போது நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இருக்கும் இந்திய அணி, அந்நாட்டு எதிராக ஐந்து ஒருநாள் போட்டி மற்றும் மூன்று டி-20 போட்டியில் பங்கேற்று வருகிறது. 

இன்று இந்தியா - நியூசிலாந்து இடையே முதல் ஒருநாள் போட்டி நேப்பியர் மெக்லீன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி 45(59) ரன்கள் எடுத்தார். இருஅணிகளுக்கும் இடையே நடைபெறும் இரண்டாவது போட்டி வரும் 26 ஆம் தேதி மவுண்ட் மௌனன்குய் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. 

இந்த நிலையில், நியூசிலாந்து அணியுடனான கடைசி இரண்டு போட்டிகள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் இருந்து இந்திய கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு வழங்க இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. அவருக்கு பதிலாக இந்திய அணியை துணை கேப்டன் ரோஹித் சர்மா வழிநடத்துவார் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Trending News