Virat Kohli Net Worth: இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தற்போது உலகின் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். இன்ஸ்டாகிராமில் 252 மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்களுடன், கோலி சமூக ஊடகங்களில் மிகப்பெரிய பாலோயர்ஸ் உள்ளவர்களில் ஒருவராகவும் இருக்கிறார்.
அந்த வகையில், கோலியின் நிகர சொத்து மதிப்பு ரூ. 1,050 கோடி என்றும் இது தற்போதைய சர்வதேச கிரிக்கெட் வீரர்களிலேயே அதிகபட்சமானதாக உள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 34 வயதான கோலி, இந்திய அணியின் 'A+' ஒப்பந்தத்தின் மூலம் 7 கோடி ரூபாய் சம்பாதிக்கிறார். ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் அவரது போட்டி கட்டணம் ரூ.15 லட்சம், ஒருநாள் போட்டிக்கு ரூ.6 லட்சம், டி20 போட்டிக்கு ரூ.3 லட்சம் ஆகும்.
மேலும் படிக்க | ரோகித் சர்மா தொடர்ந்து விளையாட வேண்டும் என்றால் இதை செய்தாக வேண்டும் - கிரீம் ஸ்மித்
7 ஸ்டார்-அப் நிறுவனங்கள்
மேலும், விராட் கோலி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு உடனான ஐபிஎல் ஒப்பந்தத்தின் மூலம் ஆண்டுதோறும் ரூ.15 கோடி சம்பாதிக்கிறார். அவர் பல பிராண்டுகளையும். வைத்திருக்கிறார். மேலும், ஏழு ஸ்டார்ட்-அப்களில் முதலீடு செய்துள்ளார். இதில் ப்ளூ ட்ரைப், யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ்பிஸ், MPL மற்றும் ஸ்போர்ட்ஸ் கான்வோ போன்றவை அடங்கும்.
விளம்பரங்களில் புரளும் கோடிகள்
கோலி 18-க்கும் மேற்பட்ட பிராண்டுகளுக்கு ஒப்புதல் அளித்து, பாலிவுட் மற்றும் விளையாட்டுத் துறையில் ஒரு தனிநபரால் அதிகப்பட்சமாக ஒரு விளம்பரத்தின் படப்பிடிப்புக்காக ஆண்டுதோறும் ரூ. 7.50 முதல் 10 கோடி வரை கட்டணம் வசூலிக்கிறார். அத்தகைய பிராண்ட் ஒப்புதல்கள் மூலம் அவர் சுமார் ரூ.175 கோடி சம்பாதிக்கிறார்.
சமூக ஊடகங்களில், அவர் இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டரில் ஒரு இடுகைக்கு முறையே ரூ.8.9 கோடி மற்றும் ரூ.2.5 கோடி வசூலிக்கிறார். அவருக்கு மும்பையில் ரூ. 34 கோடி மதிப்பிலும் மற்றும் குருகிராமில் ரூ. 80 கோடி மதிப்பிலும் இரண்டு வீடுகள் உள்ளன. மேலும் ரூ. 31 கோடி மதிப்புள்ள சொகுசு கார்களும் அவரிடம் உள்ளன.
பார்ம் தொடருமா?
இவை தவிர, இந்தியன் சூப்பர் லீக்கில் போட்டியிடும் எஃப்சி கோவா கால்பந்து கிளப், டென்னிஸ் அணி மற்றும் மல்யுத்த அணியும் கோலிக்கு சொந்தமாக உள்ளது. இவற்றின் மூலமே, கோலியின் நிகர சொத்து மதிப்பு ரூ. 1,050 கோடியாக உள்ளது என கணக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் நிறைவடைந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இரண்டு இன்னிங்ஸிலும் விராட் கோலியால் பெரிய அளவில் ரன்களை குவிக்க இயலவில்லை. ஐபிஎல் தொடரில் நல்ல பார்மில் இருந்த அவர், அடுத்தடுத்த தொடர்களில் அதே பார்மை தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியில் கோலி இடம்பிடித்து, மீண்டும் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ