கொழும்பு: இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, அந்த நாட்டு அணியுடன் மூன்று ஒருநாள் போட்டியில் விளையாடியது. அந்த 3 போட்டியிலும் இலங்கை அணி வெற்றி பெற்று வங்கதேச அணியை ஒய்ட்வாஷ் செய்துள்ளது.
2019 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு வங்கதேச அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றது. வங்கதேச அணியின் கேப்டன் மஸ்ரபி மோர்ட்டாசா காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டதால், தமிம் இக்பால் தலைமையில் வங்கதேச அணி அணி இலங்கை சென்றனர்.
கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல கடந்த ஜூலை 28 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது. கடைசி மற்றும் மூன்றாவது போட்டி நேற்று (ஜூலை 31) நடைபெற்றது. அதில் இலங்கை அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுது. இந்த வெற்றிகள் மூலம் 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது.
சுமார் 3 வருடங்களுக்கு (மாதம் 44) பிறகு தனது சொந்த மண்ணில் சர்வதேச தொடரை வென்றுள்ளது. கடைசியாக இலங்கை அணி அயர்லாந்து அணிக்கு எதிராக 2-0 என்ற கணக்கில் 2016 ஆம் ஆண்டு தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.