வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய அணி, ஷிகர் தவான் தலைமையில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. இப்போது ரோகித் சர்மா தலைமையில் 20 ஓவர் போட்டியில் களம் காண இருக்கிறது. நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியின் 20 ஓவர் போட்டியில் களமிறங்க இருக்கிறார் ரோகித் சர்மா. அவருடைய வருகை இந்திய அணிக்கு நிச்சயம் பலமாக இருக்கும். ஒருநாள் போட்டியில் தோல்வியைடந்தாலும், 20 ஓவர் போட்டிக்கு நம்பிக்கையுடன் களம் காண இருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி.
அந்த அணியின் கேப்டன் நிக்கோலஸ் பூரன் பேசும்போது கூட, மற்ற போட்டிகளைப் போல், 20 ஓவர் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டம் அப்படி இருக்கும் என நினைத்துவிட வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். 20 ஓவர் போட்டிகளில் முற்றிலும் மாறுப்பட்ட அணியாக நாங்கள் களமிறங்குவோம் என எச்சரித்துள்ள அவர், ஷிம்ரோன் ஹெட்மயர் அணிக்கு திரும்பியிருப்பது கூடுதல் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார்.
பேட்டியில் பேசியிருக்கும் நிக்கோலஸ் பூரன், "20 ஓவர் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆட்டம் வேறு மாதிரியாக இருக்கும். எங்களால் நிச்சயம் இந்திய அணியை வீழ்த்த முடியும். இந்த தொடரில் மாறுப்பட்ட வெஸ்ட் இண்டீஸ் அணியை காண்பீர்கள். எங்களின் ஆட்டமும் வித்தியாசமாக இருக்கும். குறைத்து மதிப்பிட்டுவிட வேண்டாம். ஷிம்ரோன் ஹெட்மயர் அணிக்கு திரும்பியிருக்கிறார். அவர் அணிக்கு மீண்டும் திரும்பியிருப்பது மகிழ்ச்சி. உடற் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அணியினர் சவாலுக்கு தயாராக உள்ளனர். ஒரு அணியாக இந்திய அணியை உற்சாகமாக எதிர்கொள்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.
ஷிம்ரோன் ஹெட்மயர் அணிக்கு திரும்பியிருக்கும் அதேவேளையில் பேபியன் ஆலன் மற்றும் ஷெல்டன் காட்ரெல் ஆகியோருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் இடம் கிடைக்கவில்லை. ஷெல்டன் காட்ரெல் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நிலையில், பேபியன் ஆலன் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்திய அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இளம் வீர ர்கள் பலருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணியில் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | Virat Kohli: ஃபார்முக்கு திரும்ப விராட் கோலி எடுத்த அதிரடி முடிவு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ