முதன்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மீண்டும் கோப்பையை வெல்வதற்கு குமார் சங்ககரா தலைமையில் புதிய வியூகங்களை வகுத்து வருகிறது. அதன் ஒருபகுதியாக, ஏற்கனவே ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் ஜோன்ஸ் அந்த அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார். 2019 ஆம் ஆண்டு அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக பணியாற்றிய அவர், 2 ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தானுடன் கைகோர்த்துள்ளார்.
மேலும் படிக்க | ஐபிஎல் 2022-ல் விளையாடுகிறாரா சுரேஷ் ரெய்னா? எந்த அணிக்கு தெரியுமா?
கவுண்டி கிரிக்கெட்டுகளில் கென்ட், சோமர்செட், நார்தாம்ப்டன்ஷயர் மற்றும் டுபிர்ஷயர் அணிகளுக்காக விளையாடி இருக்கும் அவர், 148 முதல் தர போட்டிகளில் 387 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அனுபவம் வாய்ந்த வேகப் பந்துவீச்சாளரின் வருகையால் ராஜஸ்தான் அணி, மீண்டும் பலமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து அவர் பேசும்போது, "ராஜஸ்தான் அணிக்கு மீண்டும் திரும்பியிருப்பதில் பெரும் மகிழ்ச்சி. ஐபிஎல் தொடரில் இந்த அணியுடன் மீண்டும் பணியாற்றுவதற்கு வாய்ப்பு கொடுத்த அணி நிர்வாகத்துக்கு நன்றி. வேகப்பந்துவீச்சில் ராஜஸ்தான் சிறந்து விளங்குவதற்கான பயிற்சிகளை நிச்சயம் மேற்கொள்வோம்" எனத் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் அணி மார்ச் 7 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை பயிற்சியில் ஈடுபட உள்ளது. அப்போது அணியினருடன் அவர் இணைய உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குநராக இருக்கும் குமார் சங்ககரா பேசும்போது, "ஜோன்ஸின் வருகையால் ராஜஸ்தான் அணி மகிழ்ச்சியில் உள்ளது. வேகப்பந்துவீச்சில் நிபுணத்துவம் பெற்ற அவர், எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக இருப்பார் என நம்புகிறோம்" எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க | IPL2022: சிஎஸ்கே-வில் இருந்து வெளியேறப்போகும் மற்றொரு வீரர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR