IPL அலப்பறை: கமெண்டில் மகனுக்கு பெண் கேட்ட Bravo, கனவை கலைத்த Pollard

இந்த ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. பிளேஆஃபிற்கு தகுதி பெற்ற முதல் அணியாகும் சென்னை சூப்பர் கிங்ஸ். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 4, 2021, 04:58 PM IST
IPL அலப்பறை: கமெண்டில் மகனுக்கு பெண் கேட்ட Bravo, கனவை கலைத்த Pollard  title=

IPL 2021: சென்னை சூப்பர் கிங்ஸின் சிறந்த ஆல்-ரவுண்டரான டுவைன் பிராவோ, தன் வேடிக்கையான பேச்சுக்கும் விளையாட்டான நடவடிக்கைகளுக்கும் பெயர் பெற்றவர். தற்போது அவர் மும்பை இந்தியன்ஸ் வீரரான கீரோன் பொல்லார்டை இன்ஸ்டாகிரமைல் கிண்டல் செய்துள்ளார்.

பிரேவோவின் (Dwayne Bravo) கிண்டலுக்கு பொல்லார்டும் சரியான பதிலை அளித்துள்ளார். இந்த முழு விவகாரமும் டுவைன் பிராவோவின் மகனின் பிறந்தநாளில் தொடங்கியது. இருவரின் உரையாடலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிராவோ தனது மகன் பொல்லார்டின் மருமகன் என்று கூறினார்

டுவைன் பிரேவோ தனது மகனின் பிறந்தநாளையொட்டி இன்ஸ்டாகிராமில் சில படங்களைப் பகிர்ந்தார். ‘என் இனிய பிரேவோ ஜூனியர், இன்று உங்கள் தினம். உங்கள் தந்தை உங்களை மிகவும் நேசிக்கிறார்' என்று அவர் அதில் எழுதியிருந்தார்.

அவரது பதிவில் கமெண்ட் செய்த கீரான் பொல்லார்ட், 'பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜூனியர் பிராவோ.' என்று எழுதினார். அவரது இந்த கமெண்டுக்கு பிறகு பிரேவோ தனது கிண்டலைத் துவக்கினார். பிரேவோ, ‘அவன் உங்கள் மாப்பிள்ளை’ என எழுதினார். இதற்கு பொல்லார்ட், ‘கனவு காண்பதை நிறுத்துங்கள். ஏன் தாமதமாக தூங்குகிறீர்கள்' என்று பதிலளித்தார்.

ALSO READ: டி 20 கேப்டனாக ரோஹித் சர்மாவை விட ரிஷப் பண்ட் சிறந்த தேர்வா?

ஐபிஎல்லில் பிரேவோவின் சென்னை அணி முதலிடத்தில் உள்ளது

இந்த ஐபிஎல் (IPL) சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி முதலிடத்தில் உள்ளது. பிளேஆஃபிற்கு தகுதி பெற்ற முதல் அணியாகும் சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த சீசனில் சிஎஸ்கேவின் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடியுள்ளனர். டுவைன் பிராவோ தனது சிறந்த பந்துவீச்சால் பல முக்கிய போட்டிகளில் அணியின் வெற்றிக்கு காரணமானார். எனினும், அவரது பேட்டிங்கில் இன்னும் அவருக்கு ரன்கள் வரவில்லை.

5 முறை சாம்பியனான மும்பை இந்த முறை சரியாக விளையாடவில்லை

5 முறை ஐபிஎல் சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் இந்த முறை சரியாக விளையாடவில்லை. மும்பையின் பேட்டர்கள் இந்த முறை  அணியை மிகவும் ஏமாற்றமடையச் செய்துள்ளனர். மும்பை இந்த முறை பிளேஆஃப்களில் நிழைய போராடுவதற்கு இதுவே காரணம். ஐபிஎல் இரண்டாம் கட்டத்தில் பொல்லார்ட் 2 விக்கெட்டுகளை மட்டுமே எடுத்துள்ளார். மேலும் அவரது பேட்டிங்கும் சொல்லும் அளவுக்கு இல்லை.

ALSO READ: RCB இன் அடுத்த கேப்டன் யார்? இந்த 3 வீரர்களுக்கு அதிக வாய்ப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News