INDvsSL: இந்திய அணியில் காத்திருக்கும் மிகப்பெரிய மாற்றம் - ரோகித் முடிவு

இலங்கை அணிக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணியில் மிகப்பெரிய மாற்றங்களை செய்ய கேப்டன் ரோகித் சர்மா திட்டமிட்டுள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 26, 2022, 09:25 AM IST
  • இந்தியா - இலங்கை 2வது 20 ஓவர் போட்டி
  • தர்மசாலாவில் நடைபெறுகிறது
  • பிளேயிங் 11-ல் மாற்றம் இருக்கலாம்
 INDvsSL: இந்திய அணியில் காத்திருக்கும் மிகப்பெரிய மாற்றம் - ரோகித் முடிவு title=

இலங்கைக்கு எதிரான 2வது டி20 போட்டி இன்று தர்மசாலாவில் நடக்கிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. அதேபோல் இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி தொடரை கைப்பற்றலாம். இதற்காக கேப்டன் ரோகித் சர்மா  அனைத்து யுக்திகளையும் கையில் எடுப்பார். எனவே இன்றைய போட்டியில் அணியில் சில பெரிய மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க | ஐபிஎல் 2022 தொடங்கும் தேதி அறிவிப்பு - ரசிகர்களுக்கு அனுமதி?

முதல் டி20 போட்டியில் ரோகித் சர்மா மற்றும் இஷான் கிஷான் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் 111 ரன்கள் பார்ட்னர்ஷிப் போட்டனர். அதன்படி இரண்டாவது டி20-ல் இந்த ஜோடி மாற்றப்படாது. ஷ்ரேயாஸ் ஐயர் மூன்றாம் இடத்தில் விளையாடலாம். கடந்த போட்டியில் 52 ரன்கள் எடுத்திருந்தார். நான்காவதாக தீபக் ஹூடா இருப்பார். முதல் போட்டியில் அவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் பந்துவீச்சில் கட்டுகோப்பாக பந்துவீசினார். 

சஞ்சு சாம்சனுக்கு ஐந்தாவது இடத்தில் வாய்ப்பு அளிக்கப்படலாம். ஆறாவது இடத்தில் வெங்கடேச ஐயருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது. ஏழாவது நம்பர் ரோஹித் சர்மா ரவீந்திர ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுப்பார். பேட்டிங்கில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும் பந்துவீச்சில் மாற்றம் இருக்க வாய்ப்புகள் உள்ளன. அதன்படி யுஸ்வேந்திர சாஹல் வெளியேற உட்காரவைக்கப்படலாம். அவருக்கு பதிலாக குல்தீப் யாதவ் களமிறங்குவார். 

இந்தியா உத்தேச அணி; 

ரோஹித் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர், சஞ்சு சாம்சன், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹெர்ஷல் படேல்.

மேலும் படிக்க | மும்பை இந்தியன்ஸூக்கு எதிராக மற்ற ஐபிஎல் அணிகள்..!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News