இந்தியா ஆஸ்திரேலியா டி20 போட்டி இந்த சேனலில் மட்டும் தான் ஒளிபரப்பு!

இந்திய அணியில் விக்கெட் கீப்பர் பதவிக்கான போட்டி ரிஷப் பந்த் மற்றும் தினேஷ் கார்த்திக் இடையே நடைபெற்று வருகிறது.    

Written by - RK Spark | Last Updated : Sep 20, 2022, 10:31 AM IST
  • ஆஸ்திரேலியாக்கு எதிரான டி20 தொடர் இன்று தொடங்குகிறது.
  • மொஹாலியில் இரவு 7.30 மணிக்கு போட்டி நடைபெறுகிறது.
  • தொடரை வெல்ல இந்தியா மும்முரம்.
இந்தியா ஆஸ்திரேலியா டி20 போட்டி இந்த சேனலில் மட்டும் தான் ஒளிபரப்பு! title=

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் டி20 தொடர் மொஹாலியில் இன்று தொடங்குகிறது. சமீபத்தில் முடிவடைந்த ஆசியக் கோப்பை 2022 இல் இந்திய அணி பைனலுக்கு வராமல் வெளியேறியது.   பாகிஸ்தான் அணிக்கு எதிரான பைனல் போட்டியில் இலங்கை வெற்றி பெற்றது. ஆசிய கோப்பையில் விராட் கோலி தனது பழைய பார்மிற்கு மீண்டும் திருப்பி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தனது 71வது சதம் அடித்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் சிறப்பு கவனம் செலுத்தும் வீரர்களில் நிச்சயம் கோஹ்லி இருப்பார்.  அதே வேளையில் ரோஹித் ஷர்மா, கே.எல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்றவர்களும் முக்கிய வீரர்களாக பார்க்கப்படுகின்றனர். விக்கெட் கீப்பர் இடத்தில் ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக் இருவரில் யாரை களமிறக்குவது என்ற குழப்பதில் இந்திய அணி உள்ளார்.  

பேட்டிங்கை பொறுத்தவரை, கேஎல் ராகுலுடன் இணைந்து ரோஹித் சர்மா ஓப்பனிங் செய்ய உள்ளார், அதே நேரத்தில் விராட் கோலி நம்பர் 3 இடத்தில் களமிறங்குவார்.   சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்தில் இடத்திலும், பந்த் எடுக்கப்படாவிட்டால், ஹர்திக் பாண்டியா 5-வது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது, தினேஷ் கார்த்திக் 6-வது இடத்தைப் பெறுவார்.  பந்த் அணியில் இடம் பெற்றால் ஹர்திக்குக்கு முன்னாள் இறங்க வாய்ப்புள்ளது. காயம் காரணமாக ஜடேஜா விலகி உள்ளதால் இந்திய அணியில் நம்பர் 7 இடம் காலியாக உள்ளது.  அக்சர் படேல் அந்த இடத்தில் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  

மேலும் படிக்க | உலக கோப்பை 2022-ல் இந்திய அணி விளையாடும் போட்டிகளின் முழு விவரம்!

சுழற்பந்து வீச்சு பிரிவில் அக்சருடன் யுஸ்வேந்திர சாஹல் இணைவார். ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்ஷல் படேல் ஆகிய மூவரும் வேகப்பந்து வீச்சாளராக உள்ளனர்.  இருப்பினும், தீபக் சாஹரை லெவனில் சேர்க்க அணிக்கு விருப்பம் உள்ளது.  சாஹரின் பேட் திறமை இந்திய அணிக்கு ஒரு பெரிய ப்ளஸ். ஆனால், சாஹரை அணியில் எடுத்தால் யாரை உட்கார வைப்பது என்ற கேள்வி எழுகிறது.  இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா விளையாடும் போட்டி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.  ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்ஒர்க்கில் இந்த போட்டி ஒளிபரப்பாகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி விளையாடும் லெவன்: கேஎல் ராகுல், ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பந்த்/தினேஷ் கார்த்திக், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஹர்ஷல் படேல், ஜஸ்பிரித் பும்ரா.

மேலும் படிக்க | T20 World Cup: எதிரணியை கலங்கடிக்க ரோகித் சர்மாவின் ஸ்பெஷல் பிளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News