ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. ரூப் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்த நிலையில், சூப்பர் 12 சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 சுற்றில், இரண்டாவது பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளுக்கான போட்டிகள் இன்று நடைபெற்றது.
அதில், பெர்த் மைதானத்தில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கிய இந்தியா - தென்னாப்பிரிக்க போட்டியில், இந்தியா டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடிய இந்திய அணி 133 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 68 ரன்களை குவித்தார். தென்னாப்பிரிக்க அணியில் இங்கிடி 4 விக்கெட்டுகளையும், பர்னால் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
மேலும் படிக்க | 2023 ஏலத்தில் ஜடேஜா உட்பட CSK கழட்டிவிடப்போகும் 3 முக்கிய வீரர்கள்!
A thrilling win for South Africa and it takes them to the top of the table in Group 2 #INDvSA | #T20WorldCup | https://t.co/uficuiMq0H pic.twitter.com/0TLFpUmAd7
— ICC (@ICC) October 30, 2022
இதைத்தொடர்ந்து, விளையாடிய தென்னாப்பிரிக்க அணிக்கு அர்ஷ்தீப் சிங் கடும் சிரமத்தை உண்டாக்கினார். அவர் வீசிய 2ஆவது ஓவரில் டி காக்கை 1 ரன்னிலும், ரூசோவை ரன் ஏதும் இன்றியும் வெளியேறி அசத்தினார். ஷமி வீசிய ஆறாவது ஓவரில் கேப்டன் பவுமா 10 ரன்களில் ஆட்டமிழக்க, பவர்பிளே முடிவில் தென்னாப்பிரிக்க அணி 24 ரன்களை எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதையடுத்து, ஜோடி சேர்ந்த மார்க்ரம் - மில்லர் ஜோடி பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தது. இந்த ஜோடி 76 ரன்களை குவித்தபோது, மார்க்ரம் 52 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து, ஸ்டப்ஸ் 6 ரன்களில் வெளியேறினார்.இறுதியாக, கடைசி ஓவரில் 6 ரன்கள் தேவைப்பட மில்லர் - பர்னால் ஜோடி 2 பந்துகளை மிச்சம் வைத்து, இலக்கை அடைந்தது.
இதன்மூலம், தென்னாப்பிரிக்க அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இரண்டாவது பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளது. டேவிட் மில்லர் ஆட்டமிழக்காமல் 59 ரன்களை எடுத்துள்ளார். இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் 2 விக்கெட்டுகளையும், ஷமி, ஹர்திக் பாண்டியா, அஸ்வின் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். அஸ்வின் வீசிய 12ஆவது ஓவரில் மார்க்ரம் கொடுத்த கேட்ச்சை கோலி தவறவிட்டது சற்று பின்னடைவை ஏற்படுத்தியதாகவே தெரிகிறது. அப்போது மார்க்ரம் 35 ரன்களை அடித்திருந்தாலும், மார்க்ரம் - மில்லர் கூட்டணி அப்போதே முறிந்திருக்கும் என கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா, வங்கதேசம் 4 புள்ளிகளுடன் இரண்டாவது, மூன்றாவது இடத்திலும் உள்ளன. ஜிம்பாப்வே 3 புள்ளிகள், பாகிஸ்தான் 2 புள்ளிகள், நெதர்லாந்து புள்ளிகள் ஏதும் இன்றி முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | INDvsSA: ’குசும்பு கொஞ்சம் அதிகம்’ அம்பயரிடம் சில்மிஷம் செய்த சாஹல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ