கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை கேன்சர் நோயால் உயிரிழந்தார்!

ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரியான சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் புற்றுநோயுடன் நீண்டகாலமாக போராடிய நிலையில் நேற்று காலமானார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 7, 2022, 03:46 PM IST
  • கடந்த சில ஆண்டுகளாகவே புற்றுநோயினால் அவதிபட்டு வந்தார் திரிலோக்சந்த்.
  • இந்நிலையில் நேற்று காஜியாபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை கேன்சர் நோயால் உயிரிழந்தார்! title=

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மற்றும் சீஎஸ்கே (CSK) அணியின் வீரருமான சுரேஷ் ரெய்னாவின் தந்தை நேற்று புற்றுநோயால் காலமானார்.  தனது தந்தையின் மறைவுக்கு இரங்கள் தெரிவித்துள்ள ரெய்னா தனது 'வலிமையான தூணை' இழந்துவிட்டதாகக் கூறியுள்ளர். 

ALSO READ | தோனியின் அறிவுரை தான் எனக்கு உதவியது: சிராஜ்!

“தந்தையை இழந்த வலியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. நேற்று, என் தந்தையின் மறைவுக்குப் பிறகு, எனது வலிமையின் தூணை இழந்தேன். அவர் தனது இறுதி மூச்சு வரை உண்மையான போராளி. நீங்கள் நிம்மதியாக இருக்க வேண்டும் அப்பா. நீங்கள் என்றென்றும் அனைவரது மனதிலும் இருப்பீர்கள்” என்று ரெய்னா ட்வீட் செய்துள்ளார். 

raina

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரெய்னாவாரியைச் சேர்ந்த ராணுவ அதிகாரியான ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் 1990களில் உத்தரபிரதேசத்தில் குடியேறினார். கடந்த சில ஆண்டுகளாகவே புற்றுநோயினால் அவதிபட்டு வந்தார் திரிலோக்சந்த். இந்நிலையில் நேற்று காஜியாபாத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். ரெய்னாவின் முன்னாள் இந்திய மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி வீரர் ஹர்பஜன் சிங், ரெய்னாவின் தந்தையின் மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். 

harbajan

"Rainaவின் தந்தையின் மறைவு குறித்து கேள்விப்பட்டு வருத்தமடைந்தேன். கடவுள் அவரது குடும்பம் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு வலிமை அளிக்கட்டும்" என்று கம்பீர் ட்வீட் செய்துள்ளார். 

gamber

35 வயதான ரெய்னா, 18 டெஸ்ட், 226 ஒருநாள் மற்றும் 78 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார்.  ஐபிஎல் 2021க்குப் பிறகு எந்த கிரிக்கெட்டிலும் அவர் விளையாடவில்லை. வரவிருக்கும் ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் அடிப்படை விலையான ரூ. 2 கோடிக்கு பட்டியலிடப்படுள்ளார்.

ALSO READ | ’மோதல்..நீக்கம்..’ தீபக்ஹூடா இந்திய அணியில் இடம்பிடித்தது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News