மூன்று போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களை விளையாட தென்னாப்பிரிக்கா அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், முதல் டி20 போட்டி கடந்த செப். 28ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தற்போது, இரண்டாவது போட்டியிலும் இந்தியா அணி வெற்றி பெற்று தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.
இரண்டாவது போட்டி, நாளை மாலை 7 மணிக்கு அசாம் மாநிலம் கௌகாத்தியில் உள்ள பர்சபரா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் கனவில் மண் அள்ளிப்போடும் விதமாக கௌகாத்தியில் கனமழை பெய்துவருகிறது. அதனால், போட்டி நடைபெறும் மைதானத்தில் அதிக நீர் தேங்கியுள்ளது.
மேலும் படிக்க | ஐயோ...! மயிரிழையில் உயிர் பிழைத்த முன்னாள் இந்திய வீரர் - போட்டியின்போது காயம்
— BCCI (@BCCI) October 1, 2022
இந்த மைதானத்தில் மொத்தம் 39 ஆயிரம் பார்வையாளர்கள் அமரும் வசதியுள்ளது. ஏற்கெனவே, போட்டியைக் காண அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத்தீர்ந்துவிட்ட நிலையில், மழை இந்திய அணியை மட்டுமல்ல ரசிகர்களையும் ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. மேலும், கௌகாத்தி நாளை மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், சில இடங்களில் இடியுடன் கூடிய மழை இருக்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
மழையை முன்னிட்டு அனைத்து ஏற்பாடுகளையும் மைதானத்தின் நிர்வாகிகள் மேற்கொண்டுள்ளனர். மேலும், மழை காலத்தில் ஆடுகளத்தை பாதுகாப்பதற்காகவே, அமெரிக்காவில் இருந்து இரண்டு பிட்ச் கவர்களை அசாம் கிரிக்கெட் சங்கம் இறக்குமதி செய்துள்ளது. இந்த கவர்கள் மிகவும் மெல்லிசாக இருந்து, ஆடுகளங்களுக்கு அதிக பாதுகாப்பை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
— BCCI (@BCCI) October 1, 2022
மேலும், அதனால் நீர் ஆடுகளத்திற்குள் செல்லாது என்றும் ஈரப்பதத்தையும் குறைக்கும் என்றும் அசாம் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் தேவஜித் சைகியா கூறியுள்ளார். சில நாள்களுக்கு முன், நடைபெற்ற ஆஸ்திரேலியாவுடனான இரண்டாவது டி20 போட்டியிலும் மழை குறுக்கிட்டது. மகாராஷ்டிராவின் நாக்பூரில் நடைபெற்ற அப்போட்டி, 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதில், இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | T20 உலகக்கோப்பையில் விளையாடுவாரா பும்ரா? மவுனம் காக்கும் பிசிசிஐ - பின்னணி இதுதான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ