'ஏன் தோனி ஏன்... ஏன் இவ்ளோ பைக்' மனைவி கேள்விக்கு டக்குன்னு அவர் சொன்ன பதில் இருக்கே...!

Dhoni Bike Car Collection: தோனியின் பைக், கார் சேகரிப்பை பார்த்த முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத் வியப்படைந்தார். மேலும், அங்கு எடுத்த வீடியோ ஒன்றை அவர் பதிவிட்ட நிலையில் தற்போது அது வைரலாகி வருகிறது. 

Written by - Sudharsan G | Last Updated : Jul 18, 2023, 11:40 AM IST
  • அந்த வீடியோவை தோனியின் ராஞ்சி பண்ணை வீட்டில் எடுக்கப்பட்டது.
  • தோனியின் மனைவி இந்த வீடியோவை எடுத்துள்ளார்.
  • தோனி தற்போது அறுவை சிகிச்சைக்கு பின் ஓய்வில் உள்ளார்.
'ஏன் தோனி ஏன்... ஏன் இவ்ளோ பைக்' மனைவி கேள்விக்கு டக்குன்னு அவர் சொன்ன பதில் இருக்கே...! title=

Dhoni Bike Car Collection Video: இந்திய கிரிக்கெட் அணிக்கு டி20 உலகக்கோப்பை, ஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பை, சாம்பியன் டிராபி என பெரும் ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த கேப்டன் தோனி என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அவருக்கு கிரிக்கெட் மீது கொண்ட காதலை போலவே கார், பைக் போன்றவற்றின் மீதும் அதீத காதல் உடையவர் என்பதையும் அவரது ரசிகர்கள் உள்பட பலரும் அறிந்திருப்பீர்கள். 

அதீத காதல்

ஆனால், அவர் எந்த அளவிற்கு கார், பைக்கை ரசிக்கக்கூடியவர், அதை விரும்பக்கூடியவர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவுதான். தற்போது இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், தோனியின் ராஞ்சி பண்ணை வீட்டில் இருந்து எடுத்த வீடியோ ஒன்றை தற்போது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த இரண்டு நிமிடம் நீடிக்கும் வீடியோவை பார்த்தாலே தோனி பைக், கார்களின் மீது வைத்துள்ள இனம்புரியாத காதலை உங்களால் புரிந்துகொள்ள முடியும். 

சாக்ஷி எடுத்த வீடியோ

அந்த வீடியோவில், தோனியுடன் வெங்கடேஷ் பிரசாத்தும், சில நண்பர்களும் உள்ளனர். அவர்கள் தோனியின் ராஞ்சி பண்ணை வீட்டில் பைக், கார்களை வைத்திருக்கும் பிரத்யேக இடத்திற்கு (Garage) வந்துள்ளனர், அங்கிருந்து தோனி சேகரிப்பில் வைத்திருக்கும் பைக், கார்களை காட்டி அவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோவை தோனியின் மனைவி சாக்ஷி எடுத்துள்ளார், அவர் கேள்விகளை கேட்க கேட்க வெங்கடேஷ் பிரசாத் தோனியின் வாகன சேகரிப்பு குறித்து வாய்பிளந்து விவரித்து வந்தார். 

மேலும் படிக்க | டெஸ்ட், ஒருநாள், டி20... மூன்றிலும் இந்தியாவின் எதிர்காலம் இவர் தான் - பேட்டிங் பயிற்சியாளர் புகழ்ச்சி!

'வியப்பாக உள்ளது'

அந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த வெங்கடேஷ் பிரசாத், அதில்,"ஒரு நபரிடம் நான் பார்த்த பித்துபிடித்த உணர்வுகளில் ஒன்று. என்ன ஒரு கலெக்ஷன், என்ன ஒரு மனிதன், தோனி. ஒரு சிறந்த சாதனையாளர் மற்றும் இன்னும் நம்பமுடியாத நபர். இது அவரது ராஞ்சி வீட்டில் உள்ள பைக்குகள் மற்றும் கார்களின் சேகரிப்பின் ஒரு பார்வை. தோனி என்ற அந்த மனிதராலும், அவரது வேட்கையாலும் நான் வியப்படைகிறேன்" என குறிப்பிட்டுள்ளார். 

அந்த வீடியோவின் தொடக்கத்தில், தோனியின் மனைவி சாக்ஷி வெங்கடேஷ் பிரசாத்தை நோக்கி, 'எங்கே இருந்து தொடங்குவது...?, சரி, ராஞ்சிக்கு வந்திருப்பதை எப்படி உணருகிறீர்கள்' என்றார். அதற்கு வெங்கடேஷ்,'இது முதல்முறை அல்ல, நான்காவது முறையாக ராஞ்சி வருகிறேன். ஆனால், இந்த இடம் (தோனியின் கார், பைக் வைத்திருக்கும் இடம்) பார்க்கவே வியப்பாக இருக்கிறது" என்றார். 

அப்போது அங்கிருந்த மற்றொரு முன்னாள் இந்திய வீரர் சுனில் ஜோஷி,"எனக்கும் ராஞ்சிக்கு வருவது முதல் முறை இல்லை, ஆனால் இந்த ஜாம்பவானுடன் இருப்பது முதல்முறை. இந்த மொத்த அமைப்பையும் உங்களால் விவரிக்கவே முடியாது" என மெய்மறந்து பேசினார். 

பைத்தியக்காரத்தனம்

உரையாடலின் போது வெங்கடேஷ் பிரசாத் கூறினார், யாராலும் அந்த அளவிற்கு பைத்தியமாக இல்லாமல், உங்களிடம் இவ்வளவு பைக்குகள் இருக்க முடியாது என்றார். அதற்கு சாக்ஷி,"நான் இதை பைத்தியக்காரத்தனம் என்று தான் கூறுவேன்" என்று நகைப்புடன் கூறினார். தொடர்ந்து, தோனியை காட்டி,"ஏன் மஹி ஏன்? இதன் தேவை என்ன?" என்றார். 

தோனியின் பதில்

அதற்கு தோனி,"ஏனென்றால் நீ தான் (சாக்ஷி) எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டுவிட்டாய். எனக்கு சொந்தமாக ஏதாவது இருக்க வேண்டும் என்று நினைத்தேன். நீ அனுமதித்த ஒரே விஷயம் இதுதான்" என பதிலளித்தார். மேலும், அந்த வீடியோவின் முடிவில், தோனியின் நண்பர் ஒருவர், தோனி வாங்கிய முதல் பைக் குறித்த கதையை சொன்னார். அதில், அந்த பைக்கில் ஒருநாள் பெட்ரோல் இல்லாமல் நிற்க, அதன்பின் உறவினர்களை அழைத்து காரில் இருந்த பெட்ரோலை எடுத்து இதில் ஊற்றி, பின்னர் சென்றதாக அவர் விவரித்தார். 

மேலும் படிக்க | குஜராத்தில் கிரிக்கெட் மைதானத்திலேயே உயிரிழந்த 20 வயது வீரர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News