உலககோப்பை தொடர்
இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்வரும் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரை நடத்துகிறது. அக்டோபர் 5 தொடங்கி நவம்பர் 19 வரை இந்தியாவின் பல்வேறு மைதானங்களில் ஒருநாள் உலக கோப்பை கிரிகெட் போட்டி நடைபெறுகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென்ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்தரேலியா, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து உள்ளிட்ட அணிகள் பங்கேற்கின்றன. இதனையொட்டி இந்திய மைதானங்களில் சுழற்பந்துவீச்சை எதிர்கொள்வதற்காக அனைத்து வெளிநாட்டு அணிகளும் பயிற்சி எடுத்து வருகின்றன.
பந்துவீச்சாளர்கள் தேர்வு
(@KNCBcricket) September 20, 2023
அதற்கேற்ப இந்தியாவில் இருக்கும் பந்துவீச்சாளர்களை நெட் பவுலர்களாக தேர்வு செய்து தங்களது வீரர்களுக்கு பயிற்சி கொடுக்க திட்டமிட்டுள்ளனர். நெதர்லாந்து அணியும் நெட்பவுலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டு 4 பவுலர்களை தேடி கண்டுபிடித்துள்ளனர். அதில் சென்னையை சேர்ந்த உணவு டெலிவரி பாயாக வேலை செய்த இளைஞர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரின் தேர்வு இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும், ரசிகர்கள் மத்தியிலும் வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
யார் அந்த டெலிவரி பாய்?
சென்னையைச் சேர்ந்தவர் லோகேஷ் குமார். 29 வயதாகும் அவர் தனது கல்லூரி படிப்பை 2018-ல் முடித்துள்ளார். பின், கிரிக்கெட்டில் ஆர்வம் காட்டத் தொடங்கிய லோகேஷ், ஸ்விகியில் உணவு டெலிவரி பாயாகவும் வேலை செய்து வந்துள்ளார். அண்மையில் ஸ்பின் பவுலர்கள் தேவை என்ற நெதர்லாந்து அணி வெளியிட்ட அறிவிப்பை பார்த்து அதற்கு விண்ணப்பித்துள்ளார். அவரின் சைனாமேன் ஸ்டைல் பந்துவீச்சு, அந்நாட்டு பயிற்சியாளர் மற்றும் வீரர்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியதால் அவரை தேர்வு செய்துள்ளனர். இந்தியாவில் தேர்வு செய்யப்பட்ட 4 பேரில் அவரும் ஒருவர்.
லோகேஷ் நெகிழ்ச்சி
(@KNCBcricket) September 19, 2023
இது குறித்து லோகேஷ் பேசும்போது, " இந்த நேரம் தான் என் கிரிக்கெட் பயணத்தில் மிக முக்கியமான தருணமாக நான் கருதுகிறேன். ஏனென்றால், நான் தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேஷேன் நடத்தும் மூன்றாம் டிவிஷன் ஆட்டத்தில் கூட விளையாடியது இல்லை. காந்த நான்கு வருடங்களாக ஐந்தாவது டிவிஷனில் தான் விளையாடி வருகிறேன். தற்போது நடந்து வரும் சீசனில் இந்தியன் ஆயில் நிறுவனத்திற்காக நான்காவது டிவிஷனில் விளையாட பதிவு செய்துள்ளேன்.
இந்நிலையில், நெதர்லாந்து அணியின் நெட் பந்து வீச்சாளராக தேர்வானது, என் திறமை இறுதியாக அங்கீகரிக்கப்பட்டு விட்டதாக உணர்கிறேன். மேலும், என்னை நெதர்லாந்து அணி வீரர்கள் மிகுந்த மரியாதையுடன் வரவேற்றனர். பின், வலைப்பந்து வீச்சாளர்கள் அறிமுக விழாவும் நடத்தினார்கள். அப்போது சில வீரர்கள் என்னிடம்," நீங்கள் தயங்க வேண்டாம்... இது உங்கள் அணி போல நினைத்துக்கொள்ளுங்கள்" என மகிழ்ச்சியுடன் அணுகினார்கள்" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். லோகேஷ் தேர்வு பெற்றதை நெதர்லாந்து அணியும் டிவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் படிக்க | Number 1: முகமது சிராஜ் உலகின் நம்பர் 1 ஒருநாள் கிரிக்கெட் போட்டி பவுலரானார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ