பிசிசிஐ போட்ட பலே பிளான்! கோடிகளில் கொட்டப்போகும் பண மழை

உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ தனது வருவாயை அதிகரிக்க சிறப்பான திட்டத்தை வகுத்து வருகிறது. இதன் மூலம் ரூ.8200 கோடிக்கு மேல் வருமானம் வர உள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 5, 2023, 10:12 PM IST
  • பிசிசிஐ புது பிளான்
  • விரைவில் நடைபேறும் ஏலம்
  • கோடிகளில் கொட்டும் பணம்
பிசிசிஐ போட்ட பலே பிளான்! கோடிகளில் கொட்டப்போகும் பண மழை title=

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஒரு சிறப்புத் திட்டத்தை வகுத்து வருகிறது. இதன் மூலம் மிகப்பெரிய வருவாயை ஈட்ட முடிவு செய்துள்ளது. எதிர்வரும் ஒருநாள் உலகக் கோப்பை-2023 போட்டி இந்தியாவில் நடத்தப்பட உள்ள நிலையில், அதனை குறிவைத்து இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

8200 கோடிக்கு மேல் வருவாய்

உள்நாட்டு போட்டிகளின் ஒளிபரப்பு உரிமத்தை பிசிசிஐ 5 ஆண்டுகள் என்ற சுழற்சி ஒப்பந்த முறையில் விற்பனை செய்ய இருக்கிறது. அதன்படி, மார்ச் 2028 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் நடைபெறும் 88 உள்நாட்டு போட்டிகளின் டிவி மற்றும் டிஜிட்டல் உரிமைகளை தனித்தனியாக விற்க உள்ளது பிசிசிஐ. இதன் மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு சுமார் ஒரு பில்லியன் டாலர்கள், அதாவது சுமார் ரூ. 8200 கோடி வருவாய் கிடைக்கும். இந்த ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் 21 ஹோம் மேட்சுகள் (5 டெஸ்ட், 6 ஒருநாள் மற்றும் 10 டி20) மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 18 போட்டிகள் (10 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20) அடங்கும். இந்த கால இடைவெளியில் இந்தியா மொத்தம் 25 டெஸ்ட், 27 ஒருநாள் மற்றும் 36 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.

மேலும் படிக்க | 'நானும் ஓய்வு பெறுகிறேன்' அடுத்தடுத்து ஓய்வை அறிவிக்கும் இங்கிலாந்து வீரர்கள்

6138 கோடி வருவாய்

பிசிசிஐ கடந்த ஐந்தாண்டு சுழற்சியில் (2018 முதல் 2023 வரை) ஸ்டார் இந்தியாவிடமிருந்து $ 944 மில்லியன் (சுமார் ரூ. 6138 கோடி) பெற்றுள்ளது. இதில் ஒரு போட்டிக்கு ரூ.60 கோடி (டிஜிட்டல் மற்றும் டிவி) அடங்கும். இந்த முறை பிசிசிஐ டிஜிட்டல் மற்றும் டிவி உரிமைகளுக்கு தனித்தனி ஏலத்தை நடத்த உள்ளது. ஐபிஎல்லின்போது ஊடக உரிமைகள் மூலம் ரூ 48,390 கோடி சம்பாதித்தது. இதில் டிஜிட்டல் உரிமைகளை ரிலையன்ஸ் மற்றும் டிவி உரிமையை ஸ்டார் வாங்கியது. ஐபிஎல் போன்று இதுவும் மின்-ஏலம் மூலம் முடிவு செய்யப்பட இருக்கிறது.

டிஜிட்டல் உரிமைகளை விட அதிக பணம்

இது குறித்து தொலைக்காட்சி டிஜிட்டல் ஒளிபரப்பாளர் ஒருவர் பேசும்போது, "இப்போது ஒரு புள்ளிவிவரத்தை வழங்குவது கடினம், ஆனால் கடந்த முறையுடன் ஒப்பிடும்போது டாலர்-ரூபாய் விகிதமும் மாறிவிட்டது. ஆனால் டிவி உரிமைகளை விட டிஜிட்டல் உரிமைகள் அதிக பணத்தைப் பெறலாம். டிஸ்னி, ஸ்டார், ரிலையன்ஸ் மற்றும் Viacom ஆகியோருக்கு இடையே போட்டி கடுமையாக இருக்கும் என தெரிவித்துள்ளார். Zee நிறுவனம் செப்டம்பர் முதல் வாரத்தில், அதாவது ஏலத்திற்கு முன் சோனியுடன் இணைந்தால் ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது.

வருவாய் பாதிக்கும்

மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா நடத்த உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெறவில்லை என்றால் விளம்பர வருவாய் பாதிக்கப்படும். மேலும், டெஸ்ட் போட்டிகள் பெரும்பாலும் 3 நாட்களிலேயே முடிகின்றன. அதனை எல்லாம் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது என மற்றொரு விளம்பர ஒளிபரப்பாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ஆசியக் கோப்பை போட்டிகளில் அதிரடியாய் பந்து வீசி சாதித்த இந்திய பவுலர்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News