ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக ஆடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன்

ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக களமிறங்கும் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம்பெறப்போகும் அந்த 11 வீரர்கள் இவர்கள் தான்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 26, 2023, 09:26 PM IST
  • ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்குகிறது
  • இந்திய அணி செப்டம்பர் 2ல் விளையாடுகிறது
  • பாகிஸ்தான் அணியை முதல் போட்டியில் எதிர்கொள்கிறது
ஆசிய கோப்பை: பாகிஸ்தானுக்கு எதிராக ஆடும் இந்திய அணியின் பிளேயிங் லெவன் title=

ஆசிய கோப்பை ஆகஸ்ட் 30 முதல் தொடங்குகிறது. இந்தப் போட்டியின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. அதே நேரத்தில், 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பையில் டீம் இந்தியா, செப்டம்பர் 2 ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியுடன் தொடங்கும். இந்த போட்டியில் டீம் இந்தியாவின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

திலக் வர்மா அறிமுகமா?

இளம் பேட்ஸ்மேன் திலக் வர்மா 2023 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக திலக் வர்மா களமிறங்குவாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இப்போதைய சூழ்நிலையில் திலக் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்வதற்கான போட்டியாளர். ஆனால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல்.ராகுல் ஆகியோர் உடல் தகுதி பெறவில்லை என்றால் மட்டுமே திலக் வர்மாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

மேலும் படிக்க | கெத்து காட்டிய கில், கோலி... இன்னும் யோ-யோ டெஸ்டை செய்யாத 5 இந்திய வீரர்கள் யார் யார்?

கேஎல் ராகுல் விளையாடுவது கடினம்

காயத்தில் இருந்து குணமடைந்து வரும் கே.எல்.ராகுல் இன்னும் முழுமையாக தயாராகவில்லை. அவரின் உடல் நிலையை கண்காணித்து வருகிறது பிசிசிஐ. இது குறித்து தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் பேசும்போது, கே.எல்.ராகுல் உடல் தகுதியை எட்டவில்லை. இருப்பினும் அவர் பயிற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். முழுமையாக உடல் தகுதியை எட்டவில்லை என்றால் அவருக்கு பதிலாக இஷான் கிஷன் விளையாடுவது உறுதியாகும். 

பேட்டிங் யார் இருப்பார்கள்?

பாகிஸ்தான் அணிக்கு எதிராக பேட்டிங்கில் யாரெல்லாம் இருப்பார்கள் என உத்தேசமாக கணித்தால், அதில் ரோஹித் சர்மா மற்றும் ஷுப்மான் கில் ஆகியோர் ஓப்பன் செய்வது உறுதி. அதன் பிறகு விராட் கோலி மூன்றாவது இடத்தில் விளையாடுவார். ஷ்ரேயாஸ் ஐயர் நான்காம் இடத்திலும், ஹர்திக் பாண்டியா ஐந்தாவது இடத்திலும் விளையாடலாம். இதன்பிறகு முதல் போட்டியில் கேஎல் ராகுலுக்கு பதிலாக இஷான் கிஷான் விக்கெட் கீப்பராக விளையாடலாம்.

பந்துவீச்சு எப்படி இருக்கும்?

பந்துவீச்சுத் துறையைப் பற்றி பேசுகையில், சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஏழாவது இடத்தில் விளையாடுவார். இதன் பின்னர் குல்தீப் யாதவ் அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளராக களமிறங்குவார். மறுபுறம், வேகப்பந்து வீச்சு பற்றி பேசுகையில், மூன்று வேகப்பந்து வீச்சாளர்களைக் காணலாம். இதில், முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோருடன் ஜஸ்பிரித் பும்ரா இருப்பார்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் உத்தேசமான பிளேயிங் லெவன்: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ்.

மேலும் படிக்க | பாகிஸ்தான் கூட உலக கோப்பை வெல்ல வாய்ப்பு உள்ளது - கங்குலி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News