செஸ் ஒலிம்பியாட்: வெளிநாட்டு கிராண்ட் மாஸ்டரை தோற்கடித்த 7 வயது சிறுமி

செஸ் ஒலிம்பியாட்டில் வெளிநாட்டு கிராண்ட் மாஸ்டரை தோற்கடித்த அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 4, 2022, 07:12 PM IST
  • செஸ் ஒலிம்பியாட்டில் விநோதம்
  • பார்வையாளராக வந்து அசத்திய சிறுமி
  • வெளிநாட்டு கிராண்ட் மாஸ்டரை தோற்கடித்தார்
செஸ் ஒலிம்பியாட்: வெளிநாட்டு கிராண்ட் மாஸ்டரை தோற்கடித்த 7 வயது சிறுமி title=

44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்று வருகிறது. 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்குபெற்றுள்ளனர். இந்திய அணி 3 ஓபன் பிரிவுகளிலும், 3 பெண்கள் பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. பார்வையாளர்கள் செஸ் போட்டியைக் காண தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள நிலையில், அரங்குக்கு வெளியே பார்வையாளர்கள் விளையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், வெளிநாட்டு கிராண்ட் மாஸ்டருடன் மோதிய, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 7 வயதான அரசுப் பள்ளி மாணவி அவரை வீழ்த்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.  

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சர்வாணிக்கா.  7 வயதாகும் அவர் அப்பகுதியில் இருக்கும் அரசு பள்ளியில் பயின்று வருகிறார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை பார்க்க வந்த அவருடன், போஸ்வானவை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் டிங்க்வென் மோதுவதற்கு ஒப்புக் கொண்டு விளையாடினார். முதலில் இருந்தே திறம்பட காய்களை நகர்த்திய சர்வாணிக்கா, முடிவில் டிங்க்வென்னை வீழ்த்தி அசத்தினார். இதனை அங்கிருந்த பார்வையாளர்கள் கைதட்டி ஆரவார குரல் எழுப்பி சிறுமியை கொண்டாடினர். டிங்வென்னும் சிறுமியை பாராட்டி, அவருடன் செல்பி எடுத்துக் கொண்டார். 

மேலும் படிக்க | CWG 2022: காமன்வெல்த் போட்டிகளில் கலந்துக் கொள்ளும் இந்திய விளையாட்டு வீரர்கள்

அப்போது பேசிய சிறுமி சர்வாணிகா," நான்கு வயது முதல் செஸ் விளையாடி வருகிறேன். மாவட்ட மாநில அளவிலான போட்டிகளில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். 7 வயதுக்குட்பட்டோருக்கான சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளேன்" எனத் தெரிவித்தார். இவர் அடுத்ததாக இலங்கையில் நடைபெற உள்ள ஆசிய அளவிலான சதுரங்கப் போட்டியில் விளையாட தேர்வாகியுள்ளார். 

மேலும் படிக்க | அசத்தும் செஸ் ஒலிம்பியாட்! அதிவேக 5ஜி இன்டர்நெட், 2000 சிம்கார்டுகள் தயார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News