6 பந்துகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய 12 வயது இளம் பவுலர் - நம்ப முடிகிறதா..!

கிரிக்கெட்டில் இளம் வீரர் ஒருவர் 6 பந்துகளில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் உலகில் பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியிருக்கிறார். கிரிக்கெட் விநோதங்களில் ஒன்றாகவும் இது பதிவாகியுள்ளது.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 17, 2023, 07:12 AM IST
  • கிரிக்கெட்டில் ஒரு விநோதம்
  • 6 பந்துகளில் 6 விக்கெட்
  • 12 வயது பவுலர் சாதனை
6 பந்துகளில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய 12 வயது இளம் பவுலர் - நம்ப முடிகிறதா..! title=

கிரிக்கெட்டில் அதிசயம்

கிரிக்கெட் மைதானத்தில் அடிக்கடி ஏதாவது விநோதங்கள் நடக்கும். அதனை நம்புவது கடினம். சில நேரங்களில் சாத்தியமற்ற இலக்குகள் ஈஸியாக எதிரணியால் சேஸ் செய்யப்படும். சில நேரங்களில் பிடிக்கவே முடியாது என ஆணித்தரமாக எல்லோரும் நம்பிக்கொண்டிருக்கும்போது, திடீரென அப்படியான கேட்சுகள் பிடிக்கப்படும். அதற்கு இணையான சம்பவம் தான் 6 பந்துகளில் 6 விக்கெட் எடுப்பதும். விநோதங்களின் உச்சமாக தான் இவையெல்லாம் நிச்சயம் இருக்க முடியும். கிரிக்கெட் விளையாடுபவர்களுக்கு தெரியும், 6 பந்துகளில் 6 விக்கெட் என்பதெல்லாம் நிச்சயம் கனவிலும் கூட நினைத்து பார்க்க முடியாத... கூடாத சம்பவம்.  ஆனால் அது இப்போது நிகழ்ந்திருக்கிறது. 

மேலும் படிக்க | தண்ணீருக்குள் திடீரென குதித்த ரோஹித் சர்மா... அதுவும் மனைவிக்காக - ஏன் தெரியுமா?

கிரிக்கெட்டில் விநோதம்

இதற்கு முன்னால் நேபாள ப்ரோ கிளப் சாம்பியன்ஷிப்பில் மலேசியா கிளப் லெவன் மற்றும் புஷ் ஸ்போர்ட்ஸ் டெல்லி இடையே டி20 போட்டியில் 6 பந்துகளில் 6 விக்கெட் விழுந்திருக்கிறது. ஆனால் இதில் ரன் அவுட்டுகளும் உண்டு. இப்போது நடந்திருப்பதில் ரன் அவுட் இல்லாமல் பந்துவீச்சாளருக்கான விக்கெட்டாக இருக்கிறது. இது தான் அதிசயம். ஒரே ஓவரில் டபுள் ஹாட்ரிக் எடுத்திருக்கிறார் அந்த இளம் வீரர் ஆலிவர் வைட்ஹவுஸ். அவருக்கு வயது இப்போது 12

2 ஓவரில் ரன் கொடுக்காமல் 8 விக்கெட்டுகள்

ஆலிவர் வைட்ஹவுஸ் இந்த மாதம் குக்ஹிலுக்கு எதிராக ப்ரோம்ஸ்கிரோவ் கிரிக்கெட் கிளப்பிற்காக விளையாடும் போது இந்த சாதனையை செய்தார். ஆலிவர் 6 பந்துகளில் எதிரணியின் 6 பேட்ஸ்மேன்களை பெவிலியனுக்கு அனுப்பினார். ஆலிவர் இரண்டு ஓவர்களில் ரன் ஏதும் கொடுக்காமல் 8 விக்கெட்டுகளை வீழ்த்தினார். Bromsgrove கிரிக்கெட் கிளப் அணியின் கேப்டன் ஜேடன் லெவிட் பிபிசியிடம், 'அவர் (ஆலிவர்) சாதித்ததை என்னால் நம்ப முடியவில்லை. அவரைப் பற்றி சொல்வது கடினம் என்றார்.

ஆலிவர் ஒரு டென்னிஸ் சாம்பியனின் பேரன்

லெவிட் மேலும் கூறுகையில், 'ஒரு ஓவரில் இரட்டை ஹாட்ரிக் எடுத்தது ஆச்சரியமாக இருக்கிறது, இது முற்றிலும் ஆச்சரியமாக இருக்கிறது. இது ஒரு அற்புதமான முயற்சி, அவர் வயது வளரும் வரை, அதன் முக்கியத்துவத்தை அவரால் உணர முடியாது என்று நான் நினைக்கிறேன். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், லீவிட்டின் தாய்வழி பாட்டி 1969 விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியன் ஆன் ஜோன்ஸ் ஆவார் என கூறினார்.

மேலும் படிக்க | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தேர்வு செய்யப்படாதது ஏன்? அஸ்வின்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

 

Trending News