கணபதியிடம் இருந்து லட்டை பிடுங்கியது யார்? இது ஹைதிரபாத் நூதனத் திருட்டு

Lord Ganapathy: விநாயகருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட 11 கிலோ எடையுள்ள பிரமாண்டமான லட்டு பிரசாதம் மர்மமான முறையில் மாயமானது, பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 22, 2023, 11:08 AM IST
  • படையலை ஆட்டையப் போட்டது யாரு?
  • விநாயகருக்கே கல்தா கொடுத்த திருடன்
  • ஹைதராபாத் நூதனத் திருட்டு சம்பவம்
கணபதியிடம் இருந்து லட்டை பிடுங்கியது யார்? இது ஹைதிரபாத் நூதனத் திருட்டு title=

ஐதராபாத்: விநாயகர் சதுர்த்தி திருவிழாவை முன்னிட்டு விநாயகப் பெருமானுக்கு பிரசாதமாக நிவேதனம் செய்யப்பட்ட 11 கிலோ லட்டு மாயமானதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். கடவுளே, தனக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை உண்டுவிட்டாரா என்ற பரபரப்பு ஏற்பட்டது. தொந்திப்பிள்ளையார் என்று செல்லமாக அழைக்கப்படும் கணபதிக்கு உணவுவகைகள் பிடித்தமானது என்பதால், கணேசனுக்கு படைக்கப்படும் பிரசாதங்களின் பட்டியல் மிகவும் நீளமானதாக இருக்கும். அதனால் தான், ஹைதராபாத்தில் நடந்த விநாயகப் பெருமானுக்கு பிரசாதமாக வைக்கப்பட்டிருந்த 11 கிலோ லட்டுவை அவரே சாப்பிட்டுவிட்டாரா என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏனெனில் இதற்கு முன்பு, பிள்ளையார் பால் குடித்த சம்பவங்களையும் நாடு கண்டுள்ளது. தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் இருந்து பக்தர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ள வினோத சம்பவம் இது. 11 கிலோ எடையுள்ள பிரமாண்டமான லட்டு பிரசாதம் மர்மமான முறையில் மாயமானது, பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

இந்த விசித்திரமான சம்பவம் மியாபூரில் நிகழ்ந்தது. உள்ளூர் இளைஞர் குழுவான 'ஓம்கார் சேவா சமிதி' மதீனகுடா தேசிய நெடுஞ்சாலையில், பிள்ளையாருக்கு பிரமாண்ட கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. மாலை நேர வழிபாட்டிற்குப் பிறகு, சமிதியின் உதவியாளர்கள் இருவர் பாதுகாப்பு நோக்கங்களுக்காக பந்தலில் நிறுத்தப்பட்டனர்.

திடீரென்று அவர்களுக்கு உடல் அசதியும், நிற்க முடியாத அளவுக்கு உடல் கஷ்டங்களும் ஏற்பட அவர்கள் சற்று கண்ணயர்ந்துவிட்டனர். அவர்கள் கண் விழித்தவுடன், விநாயகப் பெருமானுக்கு முன்பாக படைக்கப்பட்டிருந்த லட்டு மறைந்துவிட்டது.

மேலும் படிக்க | ஆசிய கண்டத்திலேயே மிகப் பெரிய விநாயகர்: ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி!

பரவசத்திலும், சந்தேகத்தில் மூழ்கிய பக்தர்கள் பதில்களைத் தேடியபோது, ​​அந்த வினோதமான நிகழ்வின் மௌன சாட்சியாக இருந்த சிசிடிவி காட்சிகளில் ஒரு நிழல் உருவம் அதிகாலை 4:20 மணிக்கு வந்து லட்டுவை தூக்கிக் கொண்டு ஓடியது. இதைப் பார்த்து கோபமடைந்த சமிதி நிர்வாகிகள், மியாபூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர், விநாயகரிடமே லட்டு ஆட்டை போட்ட நபர் யார் என்பது தெரியவில்லை.

உணவுப் பிரியர் உமை மைந்தன்

விநாயகப் பெருமானுக்கு மிகவும் பிடித்தமான பலகாரங்கள் என்றால் மோதகம், கொழுக்கட்டை, அவல் பொரி, அப்பம், வடை பாயசம் என பட்டியல் நீண்டுக் கொண்டே போனாலும், அவருக்கு பிடித்தமான உணவுகளில் ஒன்று லட்டு.

மேலும் படிக்க | விநாயகர் சதுர்த்திக்கு மோதக நைவேத்தியம்! தொந்தி பிள்ளையாருக்கு ராகிக் கொழுக்கட்டை

விநாயகருக்கு லட்டு நிவேதனம் செய்வதன் முக்கியத்துவம்
விஷ்ணுவின் ஆறாவது அவதாரமான பரசுராமருடன் விநாயகப் பெருமான் ஒருமுறை போரிட்டதாக புராணம் கூறுகிறது. அவர்களின் சண்டையின் போது, விநாயகப் பெருமானின் பல் உடைந்து, சாப்பிடும் போது சிரமப்பட்டார். அப்போது, உணவு உண்பதில் விருப்பமுள்ள கணபதிக்காக லட்டுகள் தயார் செய்யப்பட்டன. இனிப்பான லட்டு, அவரது வாய்க்கு சுவையாக இனித்தது. அன்று முதல் விநாயகருக்கு பிடித்தமானது லட்டு என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமானது.

விநாயகருக்கு படைக்கப்படும் லட்டுகள் ஏலம் விடப்படும். அதிலும், கடந்த ஆண்டு, ஹைதராபாத்தில் புகழ்பெற்ற பங்காரு கணேஷ் லட்டு ரூ.24.6 லட்சத்துக்கு ஏலம் போனது என்பது குறிப்பிடத்தக்கது. 10 நாள் விநாயகர் திருவிழாவின் உச்சகட்டமாக 21 கிலோ லட்டு ஏலத்தில் மொத்தம் ஒன்பது பேர் கலந்து கொண்டனர்.  ஏலத்தில் வாங்கெட்டி லக்ஷ்மரெட்டி என்பவர் அதிகமான விலையை கூறி லட்டை வாங்கிவிட்டார். லட்டு ஏலம் மூலம் கிடைக்கும் பணம் பாலாபூர் பகுதியில் வளர்ச்சிப் பணிகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஆண்டுதோரும் நடைபெறும் லட்டு ஏலத்தில், 2020 ஆம் ஆண்டில், கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக ஏலம் நடைபெறவில்லை. எனவே, முதலமைச்சர் கே சந்திரசேகர் ராவிடம் லட்டு ஒப்படைக்கப்பட்டது. 

மேலும் படிக்க | 66 கிலோ தங்கம் + 336 கிலோ வெள்ளியில் உருவான சதுர்த்தி பிள்ளையார்! கடவுள் கணபதிக்கும் காப்பீடு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News