1 ஆண்டுக்கு பிறகு கன்னியில் சூரியன்.. இந்த ரசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வாம் பெருகும்

Sun Transit: ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. அதன்படி சூரியன் செப்டம்பர் 17ம் தேதி கன்னி ராசியில் சஞ்சரிக்க உள்ளார்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Sep 11, 2023, 02:24 PM IST
  • தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள்.
  • குடும்பத்துடன் வெளியூர் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.
  • செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம்.
1 ஆண்டுக்கு பிறகு கன்னியில் சூரியன்.. இந்த ரசிகளுக்கு அதிர்ஷ்டம், செல்வாம் பெருகும் title=

கன்னி ராசியில் சூரியப் பெயர்ச்சி பலன்கள் 2023: ஜோதிடத்தில் கிரகங்களின் ஏற்படும் மற்றம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதே நேரத்தில், சூரிய கிரகம் அனைத்து கிரகங்களுக்கும் ராஜா என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் சூரியன் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாறுவது அனைத்து ராசிகளையும் பாதிக்கிறது. அந்த வகையில் சூரியன் வரும் செப்டம்பர் 17 ஆம் தேதி கன்னி ராசியில் சஞ்சரிக்க அதாவது பெயர்ச்சி அடைய உள்ளார். சரியாக காலை 7:11 மணிக்கு சூரியன் சிம்ம ராசியில் இருந்து விலகி கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடையப் போகிறார்.இதன் தாக்கமானது 12 ராசிகளுக்கும் இருக்கும். இருப்பினும் குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் சூரிய பகவானின் இந்த சஞ்சாரத்தால் / பெயர்ச்சியால் மிகவும் நல்ல பலன்களைப் பெறலாம், எனவே சூரியனின் இந்த மாற்றத்தால் பலனடையப் போகும் அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் எவை என்பதை இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

மேஷ ராசி (Aries Zodiac Sign) 
மேஷ ராசிக்காரர்கள் சூரியனின் ராசி மாற்றத்தால் ஆதாயம் அடைவார்கள். சூரிய ஒளியைப் போலவே, மேஷ ராசிக்காரர்களின் அதிர்ஷ்டமும் ஒளிரும். சமூகத்தில் உங்கள் நற்பெயர் உயரும். செலவுகளைக் கட்டுப்படுத்துவது அவசியம். ஆரோக்கியம் நன்றாக இருக்கும், ஆரோக்கியமான உணவுகளை பின்பற்றுங்கள். அதே நேரத்தில், வேலை செய்பவர்கள் தங்கள் படைப்பாற்றலைக் காட்ட நல்ல வாய்ப்பைப் பெறலாம்.

மேலும் படிக்க | அடிச்சுது ஜாக்பாட்: ராகு பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு லாபமோ லாபம், தலைவிதி மாறும்

ரிஷப ராசி (Taurus Zodiac Sign)
சூரிய பகவானால் அனைத்து விதமான நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கப் போகின்றது. தனயோகம் உங்களை தேடி வரும். நிதி சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். பணவரவில் எந்த குறையும் இருக்காது. வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்க அதிக வாய்ப்புள்ளது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

விருச்சிக ராசி (Scorpio zodiac sign)
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சூரியன் பெயர்ச்சி அல்லது அதன் ராசி மாற்றம் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த பிரச்சனைகளை அனைத்தும் ஒருவழியாக தீர்வுக்கு வரும். காதல் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் வரலாம். எனவே, உங்கள் காதலன் அல்லது காதலியுடன் மனம் விட்டு பேசி பிரச்சினைகளை தீர்க்கவும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். தாயின் உடல்நிலையில் அக்கறை காட்டுங்கள். சிறு தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்காத வாய்ப்பு உள்ளது. பணவரவில் எந்த குறையும் இருக்காது.

தனுசு ராசி (Sagittarius Zodiac Sign)
தனுசு ராசிக்காரர்களுக்கு சூரியனின் சஞ்சாரம் சாதகமாக கருதப்படுகிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இந்த காலம் சாதகமாக இருக்கும். வியாபாரத்தில் பண ஆதாயமும் உண்டாகும். அதே சமயம் உடல் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. குழந்தைகளிடம் மென்மையாக நடந்து கொள்ளுங்கள். குடும்பத்துடன் வெளியூர் செல்ல வாய்ப்பு கிடைக்கும். 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | பணத்தை வழங்க ராகு ரெடி! செலவு வைக்க கேதுவும் தயார்! சிவலிங்கத்திற்கு ஜலாபிஷேகம் அவசியம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News