யாரு பெருசுனு அடுச்சு காட்டு..மாறி மாறி சண்டையிடும் பூனைகளின் வைரல் வீடியோ!

இரண்டு பூனைகள் ஒன்றுக்கொன்று அடித்துக்கொள்ளும் க்யூட்டான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.  

Written by - RK Spark | Last Updated : Jul 1, 2022, 05:48 PM IST
  • சண்டைபோட்டுக்கொள்ளும் இரண்டு பூனைகள்.
  • ஒன்றுக்கொன்று செல்லமாக சண்டையிட்டு கொள்கின்றன.
  • இணையத்தில் வைரல் ஆகி வரும் வீடியோ.
யாரு பெருசுனு அடுச்சு காட்டு..மாறி மாறி சண்டையிடும் பூனைகளின் வைரல் வீடியோ! title=

விலங்குகள் சில சமயம் ஒன்றுக்கொன்று பாசமாக இருந்தாலும் அவற்றிற்குள் சண்டை வந்தால் அந்த இடமே போர்க்களமாக மாறிவிடும்.  ஆனால் சில வளர்ப்பு பிராணிகள் சண்டையிட்டு கொள்வது பார்ப்பதற்கு கொஞ்சம் ரசிக்கும்படியானதாக இருக்கும்.  இதுபோன்ற ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, அந்த வீடியோவில் இரண்டு பூனைகள் ஒன்றுக்கொன்று கைகளால் தாக்கி சண்டையிட்டு கொள்கிறது, இணையத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை பலரும் ரசித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | மணிக்கணக்கில் ஓடிவந்த சிறுத்தைக்கு காத்திருந்து அல்வா கொடுத்த மான் - வைரல் வீடியோ

சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில் இந்த அழகான வீடியோ பகிரப்பட்டுள்ளது.  யோக் என்கிற ட்விட்டர் கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில் கருஞ்சாம்பல் நிறத்தில் ஒரு பூனையும், வெள்ளை நிறத்தில் ஒரு பூனையும் மொத்தம் இரண்டு பூனைகள் இருப்பதையும் காண முடிகிறது.  டிவி வைத்திருக்கும் மேஜையின் மீது அந்த கருஞ்சாம்பல் நிற பூனை நின்றுகொண்டு இருக்கிறது, அதனருகில் சற்று உயரம் கம்மியாக உள்ள ஒரு பலகையில் வெள்ளை நிற பூனைக்குட்டி நின்றுகொண்டு இருக்கின்றது.  இந்த இரண்டு பூனைகளும் ஒன்றையொன்று கைகளால் தூக்கிக்கொண்டு ஓய்வில்லாமல் சண்டையிட்டு கொள்கின்றது.

 

இந்த இரண்டு பூனைகளின் சண்டை காட்சிக்கு பின்னணியில் இணைக்கப்பட்டுள்ள இசை பொருத்தமாக அமைத்துள்ளது.  இணையத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவை இதுவரை இருபத்தி நான்காயிரத்திற்கும் மேற்பட்ட இணையவாசிகள் பார்த்து ரசித்துள்ளனர்.  மேலும் இந்த வீடியோவிற்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகளும், பல கமெண்டுகளும் குவிந்து வருகிறது.

மேலும் படிக்க | கழுகிடம் சிக்கி பாடாய்படும் பாம்பு தப்பித்ததா: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News