சர்ச்சை பேச்சு குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய விளக்கம் அளித்த விராட் கோலி

எனது சர்ச்சை பேச்சை பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள் என ட்வீட் செய்த இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Nov 9, 2018, 02:23 PM IST
சர்ச்சை பேச்சு குறித்து மீண்டும் சர்ச்சைக்குரிய விளக்கம் அளித்த விராட் கோலி title=

விராட் கோலியைக் குறித்து ரசிகர் ஒருவர் ட்விட்டர் பக்கத்தில், உங்களிடம் சிறப்பான திறமை இருப்பதாக தெரியவில்லை. இந்திய வீரர்களை காட்டிலும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தையே நான் மிகவும் ரசிப்பேன் என்று பதிவிட்டிருந்தார். இந்த பதிவால் கடும் கோபத்திற்கு உள்ளான இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, இதுக்குறித்து ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார்.

அந்த வீடியோவில், இந்த கருத்தைக் கூறிய அந்த ரசிகர் இந்தியாவில் வசிக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இந்தியாவை விட்டு வெளியேறி வேறு எங்காவது சென்று வசிக்கலாம், வாழலாம். எதற்காக மற்ற நாடுகளை விரும்பிக்கொண்டு, நேசித்துக்கொண்டு இந்தியாவில் அந்த ரசிகர் வாழ வேண்டும்?. நீங்கள் என்னைப் பிடிக்கவில்லை என்பதற்காக நான் கவலைப்படவில்லை” என்று விராட் கோலி வீடியோவில் பதில் அளித்திருந்தார்.

இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்ப்படுத்தி உள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் அவருக்கு எதிராக கண்டனங்கள் பதிவிட்டு வருகின்றனர். விராட் கோலியின் கருத்தால் இந்திய கிரிக்கெட் வாரியம் அதிருப்தியடைந்துள்ளது.

இந்நிலையில், இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குறிய பேச்சைக் குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், 

நான் நினைக்கறேன், ரசிகர்கள் என்னை டிரால் செய்யவில்லை, என்னை விமர்சிக்கவில்லை என்று, அப்படி டிரால் செய்தால் அதோடு நானும் இணைந்துகொள்வேன். நான் பேசிய வீடியோ என்பது, ‘இப்படிப்பட்ட இந்தியர்களும்’ இருக்கிறார்கள் என்று தெரியப்படுத்த தான். மற்றப்படி எதுவும் இல்லை. 

நாம் தேர்வு செய்வதில் சுதந்திரம் இருப்பதை நான் விரும்புபவன். நான் பேசியதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாதீர்கள். பண்டிகை காலத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள். அனைவருக்கும் அன்பும், சமாதனம் கிடைக்கட்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Trending News