கொம்பை பிடித்து வீரம் காட்டிய இளைஞரை ஆகாயத்தில் பறக்கவிட்ட காளை - வைரல் வீடியோ

கொம்பை பிடித்து வீரம் காட்டுவதுபோல் விளையாடிக் கொண்டிருந்த இளைஞரை காளை ஒன்று காற்றில் பறக்கவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 23, 2023, 12:56 PM IST
கொம்பை பிடித்து வீரம் காட்டிய இளைஞரை ஆகாயத்தில் பறக்கவிட்ட காளை - வைரல் வீடியோ title=

காளைகளிடம் வீரம் காட்டுவதாக நினைத்து அதனுடன் விளையாடினால், வேண்டாத விபரீத விளைவுகளை சந்திக்க நேரிடும். அவற்றிடம் நீங்கள் பொறுமையை எல்லாம் எதிர்பார்க்க முடியாது. அடிக்கு அடி தான் காளையிடம் இருந்து கிடைக்கும் ஒரே பதில். இதையெல்லாம் புரிந்து கொள்ளாத சிலர், காளைகளை கட்டிப் போட்டு அதனை அடக்குவதாக வீரத்தை காண்பிப்பார்கள். அவிழ்த்துவிட்டு விளையாடினால் தெரியும் அதனுடைய பலம் என்னவென்று. ஆனால் அதை செய்யமாட்டார்கள். தங்களுக்கு வசதியாக எது இருக்குமோ அதை செய்துவிட்டு காளையை அடக்கிவிட்டதாக பெருமை கொண்டாடிக் கொள்வார்கள். 

மேலும் படிக்க | அந்த பொண்ணு, அந்த பூ, அந்த பூனைகள்.... அட, அட, அட.. என்ன ஒரு காம்பினேஷன்: வைரல் வீடியோ

ஆனால், காளையின் உண்மை முகம் என்னவென்பதை இந்த வீடியோவில் பார்த்துக் கொள்ளலாம். தீண்டாதவர்களை அது எதுவும் செய்யாது. ஆனால் வேண்டுமென்றே வம்பிழுத்தால் என்ன ஆகும் என்பதை இப்போது வைரலாகியிருக்கும் வீடியோவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம். அந்த வீடியோவில் காளை ஒன்று அமைதியாக இருக்கிறது. அப்போது அங்கிருக்கும் ஒரு இளைஞர் காளையின் கொம்பை பிடித்து, அதனை அடக்கியதுபோல் சீன் போடுகிறார். ஆனால், அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என்பது அந்த நபருக்கு தெரியவில்லை. ஆம், கொம்பை சுழற்றிய காளை, அதனை பிடித்துக் கொண்டிருந்தவரை காற்றில் பறக்கவிடுகிறது.

இதனால், வானத்தில் பறந்து காளையிடம் இருந்து கொஞ்சம் தள்ளி சென்று விழுகிறார் அந்த நபர். டிவிட்டரில் பகிரப்பட்டிருக்கும் இந்த வீடியோ சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை பெற்றிருக்கிறது. கமெண்ட் அடித்திருக்கும் நெட்டிசன்கள், காளையிடம் வம்பு வச்சிக்கிட்டா இப்படி தான் ஆகும் என தெரிவித்துள்ளனர். இன்னொரு நெட்டிசன், ஹெவி வெயிட் சாம்பியன்ஷிப் போட்டியில் காளை இளைஞரை பறக்க விட்டுவிட்டதே என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார். ஒருவர், அட சாமி இது என்னா டேக் ஆஃப் என கூறியுள்ளார். பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும் இந்த வீடியோ டிரெண்டிங்கிலும் இருக்கிறது. 

மேலும் படிக்க | ஓடுங்க ஓடுங்க...சிங்கம் வருது.. : மாடுகளை காப்பாற்றிய ஹீரோ நாய், வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News