இஸ்ரேல்-ஹமாஸ் போர்: காஸாவில் மனிதாபிமான உதவிகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்தார். இதுவரை 130 ஐநா ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தி சர்வதேச அளவில் கவலைகளை அதிகரித்துள்ளது. பாலஸ்தீனத்தின் காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் தொடங்கி 2 மாதங்களுக்கு மேலாகிறது. போரை ஆரம்பித்தது ஹமாஸ் என்று சொன்னாலும் பாலஸ்தீனத்தின் சாமானிய மக்கள் கஷ்டப்படுகிறார்கள்.
இஸ்ரேல் மனித குலத்தின் நலனுக்காகப் போரை நடத்துகிறது என்பதை நிரூபிப்பதற்காக தனது தரப்பிலிருந்து வாதங்களை வழங்குவதில் மும்முரமாக உள்ளது. என்ன செய்தாவது ஹமாஸை அழிக்க வேண்டும் என்று நினைக்கும் இஸ்ரேல், ஹமாஸ் பொது மக்களை கேடயமாக பயன்படுத்துவதாக கூறுகிறது.
டெடி பியர்களில் வெடிகுண்டுகளை மறைத்து வைத்து ஹமாஸ் தாக்குதல் நடத்துவதைக் காட்டும் காணொளிகள் மற்றும் புகைப்படங்களை இஸ்ரேல் பாதுகாப்புப் படை வெளியிட்டுள்ளது.
Israelis placed teddy bears to remind the world of the 137 hostages still held by terrorists in Gaza.
Hamas hid sniper rifles and ammunition inside a teddy bear.
Can you see the difference between the two? pic.twitter.com/zmxV6UEh3r
— Israel Defense Forces (@IDF) December 9, 2023
தொடர் குண்டுவெடிப்புகளை நடத்தும் இஸ்ரேலுக்கு கண்டனங்கள் வலுத்து வரும் சூழலில், ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோவும் இஸ்ரேல் மீது தொடர் குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுவரை காஸாவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மற்றும் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பது போரின் நிலையை எடுத்து காட்டுவதாக உள்ளது.
மேலும் படிக்க | பட்டப் பகலில் இளைஞரை அடித்தே கொன்ற கொடூரம்! வைரலாகும் சிசிடிவி காட்சிகள்
இஸ்ரேல் பாதுகாப்பு படை வெளியிட்ட வீடியோ
காசாவில் மனிதாபிமான உதவிகள் முற்றிலுமாக நிறுத்தப்படும் அபாயம் இருப்பதாக ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்தார். ஹமாஸ் தாக்குதலுக்கு தண்டனையை பாலஸ்தீனத்தின் பொது மக்களுக்குக் கொடுப்பது தவறானது என்று அன்டோனியோ கூறினார். இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஐநா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் பயனளிக்கவில்லை என்பதால் கவலைகள் அதிகரித்துள்ளன.
காசாவில் போர்நிறுத்தம் செய்ய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முன்மொழிந்தது, அமெரிக்கா இந்த திட்டத்திற்கு எதிராக இருப்பது குறிப்பிடத்தக்கது. போர்நிறுத்தம் என்பது அவசரமானது என்று அமெரிக்கா கூறுகிறது.
உடனடியாக போர் நிறுத்தத்திற்கு வாக்களித்த பிரான்ஸ், போரை நிறுத்த வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது. ஹமாஸ் ஏன் நிபந்தனையின்றி போரை ஆரம்பித்தது என்ற கேள்விகளை அமெரிக்கா எழுப்புகிறது.
மனிதாபிமான உதவிகள்
ஹமாஸ் உறுப்பினர்கள், பொதுமக்களை தாக்கியதாகவும், சர்வதேச அமைப்புகளிடமிருந்து பெறப்பட்ட மனிதாபிமான உதவிகளை திருடியதாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படை கூறுகிறது. எது எப்படியிருந்தாலும், போரினால் பாதிக்கப்படும் மக்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ