குரங்குக்கு கொழுப்ப பாருங்களே.. வாழைப்பழத்தை கொடுத்த நபரிடம் எரிச்சல்: வீடியோ வைரல்

Monkey Video Viral: நபர் ஒருவர் தான் கடித்து பாதி வாழைப்பழத்தை குரங்குக்கு கொடுத்ததால் கடுப்பில்'செய்த காரியம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 27, 2023, 02:21 PM IST
  • இன்றைய வைரல் வீடியோ.
  • குரங்கின் இதுபோன்ற வீடியோவை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள்.
  • குரங்கு ஆபத்தான ரியாக்சனை கொடுத்தது.
குரங்குக்கு கொழுப்ப பாருங்களே..  வாழைப்பழத்தை கொடுத்த நபரிடம் எரிச்சல்: வீடியோ வைரல் title=

இன்றைய வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம்.

குரங்குகள் இணையத்தின் ஹீரோக்கள் என்றே கூறலாம். சமூக ஊடகங்களில் குரங்குகள் செய்யும் பல அட்டகாசங்களின் வீடியோக்கள் பகிரப்படுகின்றன. குரங்குகளின் மனநிலையை கணிப்பது கடினம். ஒரு சமயம் அமைதியாக இருக்கும் இவை அடுத்த கணமே அட்டகாசம் செய்யத் துவங்கிவிடும். அதனால்தான் அடிக்கடி தன் கருத்தை மாறி மாறி கூறுபவர்களை குரங்கு புத்தி என குறிப்பிடுகிறார்கள். 

மேலும் படிக்க | அந்த நடையழகு... சான்ஸே இல்லை... குடும்பமாக வாக்கிங் போகும் யானைகள்... ரசிக்கும் நெட்டிசன்ஸ்!

சாலைகளில் குரங்குகள் செய்யும் அட்டகாசங்களுக்கும் அளவில்லை. சாலையில் நடந்து செல்பவர்களின் பொருட்களை பிடுங்குவது, வழிப்போக்கர்களின் தோளில் சென்று அமர்வது, அவர்கது முடியை பிடித்து இழுப்பது என இவை பல வழிகளில் மக்களை தொந்தரவு செய்கின்றன. கோயில்களில் கூட குரங்குகளிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்கும் படி அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். எனினும், தற்போது வெளிவந்துள்ள ஒரு வீடியோ, குரங்குகள் தொடர்பான மிகவும் வேடிக்கையான மற்றும் அற்புதமான வீடியோவாக இருக்கின்றது. இதை பார்த்தால் கண்டிப்பாக யாராலும் சிரிக்காமல் இருக்க முடியாது. 

வைரலாகும் இந்த வீடியோவில், மொட்டை மாடியின் ஓரத்தில் குரங்கு சோகமாக அமர்ந்திருப்பதை காணலாம். அப்போது அங்கு வந்த நபர் தான் சாப்பிட்ட வாழைப்பழம் கொடுக்க நினைக்கிறார். பொதுவாக வாழைப்பழம் குரங்குக்கு மிகவும் பிடித்த பழமாகும். ஆனால் இந்த குரங்கு குரங்கு வாழைப்பழத்தை எடுக்க மறுக்கிறது. பின்னர் குரங்கு அந்த நபரை கடுப்பில் எரிச்சலுடன் பார்க்கத் தொடங்குகிறது. அந்த நபர் ஏதோ தவறு செய்ததைப் போல அந்த குரங்கு பார்க்கத் தொடங்குகிறது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பல்வேறு கேலியான கருத்தைப் பதிவிட்டு வருகின்றனர்.

 

குரங்கு தரும் காமெடி ரியாக்சன் வீடியோவை இங்கே காணுங்கள்:

குரங்கின் இந்த வேடிக்கையான செயல்கள் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்த வீடியோ வேகமாக வைரல் ஆகி வருகின்றது. குரங்கின் இந்த வேடிக்கையான வீடியோ @MatiasPe_ என்கிற டிவிட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. இதுவரை இந்த வீடியோ ஒன்றரை மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அளித்து வருகிறார்கள். 

(பொறுப்புத் துறப்பு: இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள வீடியோவும், கொடுக்கப்பட்டுள்ள தகவல்களும் சமூக ஊடகங்களிலிருந்து எடுக்கப்பட்டவை. இவற்றை ஜீ தமிழ் நியூஸ் எந்த விதத்திலும் பரிந்துரைக்கவில்லை.)

மேலும் படிக்க | வைரல் வீடியோ: ஒரு பாம்புக்கு முத்தம் கொடுக்கப்போய் 5 ராஜா நாகப்பாம்புகளிடம் கொத்து வாங்கிய நபர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News