பணியிடங்களில் பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் குழு அமைப்பு....
பணியிடங்களில் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள், சமூக வலைதளங்களில் #MeToo இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறிவருகின்றனர். திரையுல பிரபலங்கள் தொடங்கி, பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், “ நானும் பாதிக்கப்பட்டேன்” என பொருள்படும் #MeToo என்ற விழிப்புணர்வு பிரசாரம் இணைய தளத்தில் பரவி வருகிறது. இதில் தனுஸ்ரீ தத்தா, நானா படேகர் உள்ளிட்ட பலரும் சம்பந்தப்பட்டுள்ளனர். சமீபத்தில் நானா படேகருக்கு எதிராக தனுஸ்ரீ தத்தா அளித்திருக்கும் புகார் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இதை தொடர்ந்து, இத் குறித்த புகாரில் மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பர் #MeToo குறித்த புகார் காரணமாக தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, #MeToo புகார் தொடர்பாக விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தக் குழு பணியிடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் பிரச்னைகள் தொடர்பாக புதிய சட்ட வரைவுகளைப் பரிந்துரைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, நிர்மலா சீதாராமன் மற்றும் மேனகா காந்தி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.