கர்நாடகாவைச் சேர்ந்த புதுமணத் தம்பதியினர் ஜே.சி.பி. வாகனத்தில் அமர்ந்து திருமண ஊர்வலமாக சென்ற காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது!
கர்நாடகா மாநிலம் புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சேட்டன். ஜே.சி.பி. ஓட்டுநரான பணியாற்றி வரும் இவர் கடந்த 18ம் தேதி மமதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர் தனது ஜே.சி.பி. இயந்திரத்தின் மீது கொண்ட மிகுந்த அன்பு காரணமாக புதிய முயற்சியில் ஈடுபட்டு, ஜே.சி.பி. வாகனத்தில் திருமண ஊர்வலம் சென்றார். இந்த காட்சியானது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.
வழக்கமாக ஆடம்பர கார், குதிரை ஆகியவற்றின் மீது மணமக்களை ஏற்றிக் கொண்டு வரவேற்பு ஊர்வலம் வருபவர்களுக்கு மத்தியில், இவர்களது திருமண ஊர்வலம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
Karnataka: JCB operator Chetan and his wife Mamata rode home sitting in the bucket of Chetan's JCB vehicle after getting married on 18 June in Puttur’s Parpunja. pic.twitter.com/k6jgGRJ08m
— ANI (@ANI) June 22, 2018