கிரெட்டா துன்பெர்க் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மலாலா யூசுப்சாயை சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது!!
இளம் காலநிலை ஆர்வலர் கிரெட்டா துன்பெர்க் அமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா யூசுப்சாயை பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை சந்தித்து ஒன்றாக ஒரு படத்திற்கு போஸ் கொடுத்த்துள்ளனர். இருவரும் ஒரு பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் புகைப்படத்தை மலாலா இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அத்துடன் "நன்றி, கிரெட்டா துன்பெர்க்" என்று பதிவிட்டுள்ளார்.
பெண் கல்விக்காக போராடி வரும் மலாலா யூசப்சாயும், பருவநிலை மாறுபாடு பிரச்சனைக்காக குரல் கொடுத்து வரும் சிறுமி கிரேட்டா துன்பெர்க்கும் லண்டனில் சந்தித்தனர். பிரிஸ்டல் நகரில் பருவநிலை மாறுபாடு தொடர்பாக மாணவர்களுடன் இணைந்து வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்துவதற்காக, லண்டன் சென்றுள்ள கிரேட்டா அங்கு ஆக்ஸ்போர்டு பல்கலைகழகத்தில் பயின்று வரும் மலாலாவை சந்தித்துள்ளார்.
மேலும் தனது போராட்டம் குறித்தும் அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். இந்த சந்திப்பின் போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள மலாலா, கிரேட்டாவுக்காக மட்டுமே தனது வகுப்புகளை தவிர்ப்பேன் என்று தெரிவித்துள்ளார்.