இந்திய நாட்டின் மற்றொரு விருப்பமான காலை உணவான சப்பாத்தியுடன் ஒப்பிடும்போது இட்லி தயாரிப்பது எளிதானது என்பதும் இட்லியின் சிறப்பு. எளிதில் ஜீரணிக்கக்கூடிய இட்லி, மிகவும் ஆரோக்கியமான காலை உணவுத் தேர்வு என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது. அதனால் தான், உலக இட்லி தினம் மார்ச் 30 அன்று கொண்டாடப்படுகிறது, இது 2015 ஆம் ஆண்டு தொடங்கிய பாரம்பரியம் ஆகும்.
ஆனால், அதற்காக ஒருவர் லட்ச கணக்கான ரூபாய்க்கு இட்லி சாப்பிட்டார் என்றால், அது அதிர்ச்சியளிக்கும் தானே? ஹைதராபாத்தைச் சேர்ந்த இட்லி பிரியர் ஒருவர் கடந்த ஒரு வருடத்தில் ஆரோக்கியத்தை அள்ளித் தரும் தென்னிந்திய இட்லிக்காக மெனக்கெட்டிருக்கிறார் என்பது ஆச்சரித்தை அளிக்கிறது. ரூ. 6 லட்சம் ரூபாய்க்கு இட்லி பார்சல் செய்யப்பட்டதாக முன்னணி உணவு-விநியோக தளமான Swiggy வியாழக்கிழமை வெளியிட்டது.
The user ordered 8,428 plates of Idlis including orders placed for friends and family, while travelling across cities like #Bengaluru and #Chennai.
— IANS (@ians_india) March 30, 2023
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர், அதிக அளவில் இட்லி ஆர்டர் செய்ததை ஸ்விக்கி ஆதாரபூர்வமாக அறிவித்தது. இது, நெட்டிசன்களை திகைக்க வைத்துள்ளது.
அதிலும், பிரியாணிக்கு பெயர் போன ஹைதராபாத் நபர், இட்லி காதலராக இருப்பது நகைமுரணாக இருக்கிறது. விருப்பமான உணவு என்று கேட்டால், பலரும் பிரியாணி, அதிலும் ஹைதிராபாத் பிரியாணி என்று சொல்வதைக் கேட்டு பழக்கப்பட்ட நமக்கு, நாம் தினசரி சாப்பிடும் இட்லியை இந்த அளவுக்கு காதலிக்கும் ஒருவர் இருப்பார் என்பதை நம்பக்கூட முடியாது.
உலக இட்லி தினமான இன்று (மார்ச் 30), ஆன்லைன் உணவு விநியோக செயலி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு வருடத்திற்குள் எட்டாயிரம் தட்டுகளுக்கு மேல் இட்லிகளை ஆர்டர் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | மருந்தே தேவையில்லை... யூரிக் அமில பிரச்சனைக்கு சில எளிய தீர்வுகள்!
எப்படி, ஏன் எதற்கு, யார் அந்த அதிசய இட்லி மனிதன் என்று யோசித்தால், ஆர்வத்தைத் தணிக்க தெளிவான தகவல்கள் எதுவும் இல்லை. கடந்த 365 நாட்களில் மனிதன் தினமும் சுமார் 10 இட்லிகளை ஆர்டர் செய்தாலும் அந்த எண்ணிக்கை நான்காயிரத்தைத் தாண்டுவதில்லை. இருப்பினும், கடந்த 12 மாதங்களில் அவர் 8,428 பிளேட் இட்லி ஆர்டர் செய்ததாக ஸ்விகி தெரிவித்துள்ளது.
ஒரு வருடத்தில் ₹ 6 லட்சம் மதிப்புள்ள இட்லிகள் ஆர்டர் செய்யப்பட்டு டெலிவரி செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது, அதில் ஒரு ஸ்விக்கி பயனரால் அதிகபட்ச இட்லிகள் ஆர்டர் செய்யப்பட்டன, பெங்களூர் மற்றும் சென்னை.போன்ற நகரங்களுக்கு அவர் பயணம் செய்யும் போதும்,நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான ஆர்டர்களை அவர் செய்வதையும் ஸ்விக்கி கணக்கில் எடுத்துக் கொண்டது.
சுவாரஸ்யமாக, மசாலா தோசைக்குப் பிறகு, ஸ்விக்கியில் அதிகம் ஆர்டர் செய்யப்படும் காலை உணவுப் பொருட்களில் இட்லிகள் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும் அறிக்கை கூறியுள்ளது.
மேலும் படிக்க | எச்சரிக்கை! ‘இந்த’ பிரச்சனைகள் இருந்தால் கத்திரிக்காய் வேண்டாமே!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ