ஸ்பைடர்மேனாக மாறிய பூனை! வைரல் வீடியோ!

பூனை ஒன்று ஸ்பைடர்மேன் போல அந்தரத்தில் சுவற்றின் இடையில் நடந்த காட்சி ஒன்று இணையத்தில் ரசிகர்களின் கவன ஈர்ப்பை பெற்று வைரலாகி வருகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 9, 2022, 01:18 PM IST
  • ஸ்பைடர் போல சுவற்றில் நடக்கும் பூனை.
  • பார்ப்போரை ரசிக்க வைக்கும் வீடியோ.
ஸ்பைடர்மேனாக மாறிய பூனை! வைரல் வீடியோ! title=

சிறுவர் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் அதிசயித்து பார்த்த ஒன்று ஸ்பைடர்மேன்.  சுவற்றில் சரசரவென எந்தவித பிடிப்பும் இல்லாமல் ஏறும் ஸ்பைடர்கள் அதிசயமாக பார்க்கப்படுகின்றது.  இங்கு அழகான பூனை ஒன்று ஸ்பைடர் போல் சுவரில் அழகாக நடந்து சென்ற காட்சி இணையவாசிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.  பூனைகளை சிலர் வளர்ப்பு பிராணிகளாக வைத்து வளர்க்கின்றனர், இன்னும் சிலர் அதனை குடும்ப உறுப்பினர்கள் போல பாவித்து வளர்த்து வருகின்றனர்.  பூனைகளின் குறும்புத்தனமான செயல்கள் பலவும் ரசிக்கும்படியாக இருந்து வருகிறது, அதிலும் பூனையின் இந்த சாகச காட்சி அனைவரையும் ரசிக்க செய்துள்ளது.

மேலும் படிக்க | கவுண்டமணி பாணியில் எட்டி உதைத்த குரங்கு! வைரலாகும் வீடியோ!

இந்த வீடியோவானது ட்விட்டரில் யோக் என்ற கணக்கில் பதிவிடப்பட்டுள்ளது.  அந்த வீடியோவில் கொழுகொழுவென்று வெள்ளை நிறமும் பழுப்பு நிறமும் கலந்த பூனை ஒன்று காணப்படுகிறது.  அந்த பூனை அலமாரி போன்ற ஒன்றினுள் இருக்கிறது, அதிலிருந்து ஸ்பைடர்மேன் போல இரண்டு பக்கமும் தனது கால்களால் பற்றிக்கொண்டு அழகாக நடந்து வெளியே வந்து திரும்பி பார்த்து ஒரு லுக் விடுகிறது.  இந்த வீடியோவுடன் இணைக்கப்பட்டுள்ள பின்னணி இசை இந்த வீடியோவை பார்ப்பதற்கு ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது.

 

இந்த வீடியோவை பூனை பிரியர்கள் பலரும் ரசித்து வருகின்றனர்.  மார்ச் 7ம் தேதி ட்விட்டரில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை பல ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.  இந்த வீடியோவுடன் 'கேட் ஆன் தி மிஷன்' என்ற கேப்ஷனும் சேர்க்கப்பட்டுள்ளது.  இந்த வீடியோவை பலரும் லைக் செய்தும், பகிர்ந்தும், பொன்னையின் செயலை ஆச்சர்யமாகவும் பார்த்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க | சீறும் பாம்புடன் விளையாடும் சிறுமி: வைரலாகும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News