Watch viral video: முன்னாள் பிரதமரை காபி அடித்த பாலிவுட் நடிகர்!

முன்னாள் இந்திய பிரதமரின் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் திரைப்படமாக உருவாகி வருகிறது.

Last Updated : Apr 12, 2018, 09:24 AM IST
Watch viral video: முன்னாள் பிரதமரை காபி அடித்த பாலிவுட் நடிகர்!  title=

முன்னாள் இந்திய பிரதமரின் வாழ்க்கை வரலாறு பாலிவுட்டில் திரைப்படமாக உருவாகி வருகிறது.

2006-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை இந்திய பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங், பிரதமராக தேர்வு செய்யப்பட்டது தொடர்பாக, அவரது ஊடக ஆலோசகரான சஞ்சய் பாரு எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் ‘தி ஆக்சிடெண்டல் பிரைம் மினிஸ்டர்” என்ற பெயரில் திரைப்படம் உருவாகி வருகிறது.

அதனை விஜய் ரத்னாகர் குட்டே இயக்கி வருகிறார் மேலும் அதில் பிரபல நடிகர் அனுபம் கெர், மன்மோகன் சிங்காக நடித்து வருகிறார். இந்தப் படத்துக்கு, ஹன்சல் மேத்தா திரைக்கதை எழுதியுள்ளார். மேலும் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் அக்‌ஷய் கண்ணா நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை போஹ்ரா சகோதரர்கள் தயாரிக்கவுள்ளனர்.

முன்னதாக இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி, பெரும் வரவேற்ப்பு பெற்றது. தற்போது இப்படத்தில் மன்மோகன் சிங் கேரக்டரில் நடிக்கும் அனுபம் கெர்ரின் வீடியோ மற்றும் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நடிகர் அனுபம் கெர் அச்சசல் முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் போன்று தோற்றம் அளித்துள்ளார்.

 

 

Trending News