ஆக்ஸியம் மிஷன் 1, இது ஒரு தனியார் விண்வெளிப் பயணமாகும், இது முதல் முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) அனுப்பப்பட்டுள்ளது.
நான்கு பேர் கொண்ட குழுவினர் வெள்ளியன்று SpaceX ராக்கெட் கப்பலில் 11:17 am EDT (1517 GMT) க்கு விண்வெளி ஆய்வகத்திற்கு புறப்பட்டனர்.
ஹூஸ்டனை தளமாகக் கொண்ட ஸ்டார்ட்அப் ஆக்ஸியம் ஸ்பேஸ் இன்க் மூலம் இந்த குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.
இது விமானத்திற்கு பணம் செலுத்திய மூன்று வாடிக்கையாளர்களையும், ஆக்சியம் ஊழியர் மைக்கேல் லோபஸ்-அலெக்ரியாவையும் ISS க்கு அனுப்புகிறது. அங்கு இவர்கள் எட்டு நாள் தங்குவார்கள்.
புளோரிடாவின் கேப் கனாவெரலில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து குறைந்த புவி சுற்றுப்பாதையை வணிகமயமாக்குவதில் ஒரு புதிய மைல்கல் இது.
ஸ்பேஸ்எக்ஸ் ஏவுகணை வாகனம், அதன் க்ரூ டிராகன் கேப்ஸ்யூல் மூலம் ஃபால்கன் 9 ராக்கெட்டைக் கொண்டுள்ளது, இது விண்வெளியை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்கியது.
விமானப் பயணத்தை முடிந்துக் கொண்டு, சனிக்கிழமையன்று அனைவரும் விண்வெளி நிலையத்தை வந்தடைவார்கள்.
இப்போது, சுயமாக இயங்கும் க்ரூ டிராகன், சுற்றும் புறக்காவல் நிலையத்துடன் இணைக்கப்படும். முன்னாள் நாசா விண்வெளி வீரர் லோபஸ்-அலெக்ரியா இந்த மிஷனை வழிநடத்துகிறார்.
அவரைத் தவிர பைலட் லாரி கானர், மிஷன் நிபுணர்களான எய்டன் ஸ்டிபே மற்றும் மார்க் பாத்தி என மொத்தம் நால்வர் பறக்கும் புறக்காவல் நிலையத்தில் தங்கி வேலை செய்வார்கள்.
மேலும் படிக்க | பூமியில் வெற்றிக் கொடி நாட்டிய ஜெப் பெசோஸின் விண்வெளிப் பயணம் விரைவில்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR