ஜீ தமிழ் தொலைக்காட்சியின் டாப் 5 சீரியல்கள் ரேட்டிங் நிலவரம் இதோ

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ், சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்கள், சீரியல்கள் என அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றன. 

இந்நிலையில் இந்த சீரியல்களின் ரேட்டிங்கும் ஒவ்வொரு வாரமும் அதிகரித்தவாறு உள்ளது, அந்த வகையில் கடந்த வாரத்திற்கான ரேட்டிங் நிலவரங்களை பார்க் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் படி ஜீ தமிழின் டாப் 5 சீரியல்கள் என்னனென்ன? அவற்றின் ரேட்டிங் நிலவரங்களை பார்க்கலாம் வாங்க. 

1 /5

கார்த்திகை தீபம்: கார்த்திகை தீபம் சீரியல் தீபாவை கொல்ல முயற்சி, தம்பிக்கு பிரச்சனை, ஐஸ்வர்யாவுக்கு சிக்கல் என விறுவிறுப்பான கதையுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் 5.71 என்ற ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளது.   

2 /5

மாரி: மாரியையும் அவள் கர்ப்பதையும் கலைக்க தாரா டீம் இடைவிடாது சதி வேலைகளை தீட்டி பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் மாரி சீரியல் 5.07 என்ற ரேட்டிங்குடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.   

3 /5

அண்ணா: தொடர்ச்சியாக ரத்னாவை காப்பாற்ற ஷண்முகம் ஆடிய ருத்ரதாண்டவம், சௌந்தரபாண்டி செய்யும் சதி வேலைகள் என விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் அண்ணா சீரியல் 5.02 என்ற ரேட்டிங் புள்ளியுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.   

4 /5

மீனாட்சி பொண்ணுங்க: மீனாட்சிக்கு விஷத்தை கொடுத்த வீழ்த்த நினைக்கும் புஷ்பா, ஷக்தி IAS தேர்வு எழுத போக வெற்றி அமுதா என்ற பெண்ணை சக்தியாக நடிக்க அழைத்து வந்து சமாளித்து வரும் கதையால் 4.02 ரேட்டிங் புள்ளிகளை பெற்று மீனாட்சி பொண்ணுங்க சீரியல் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.   

5 /5

சீதா ராமன்: மகாவுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து வரும் சீதா, இதனால் கோபம் கொள்ளும் மகா சீதாவை பழிவாங்க போடும் பிளான்களால் சீதா ராமன் சீரியல் 3.77 என்ற புள்ளிகளுடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.