12 மொழிகளில் Zee குழுமத்தின் ZEE5 இணையதளம்!

  • Feb 15, 2018, 19:24 PM IST
1 /6

ZEE குழுமத்தின் சேவையானது 5 கண்டங்களில் கிடைக்கப்பெறுகிறது என்பதினை குறிக்கும் வகையினிலேயே ZEE5 என்று குறிக்கப்பட்டுள்ளது. கடந்த 25 வருடங்களாக தங்களது சேவையினை Zee குழுமம் சிறப்பாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

2 /6

மாதாந்திரம் ரூ.150 செலுத்தி ZEE5 சந்தாதாரர் ஆகும் ஒருவர், ZEE5 பக்கத்தின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒரு மாதத்திற்கு கண்டு ரசிக்கலாம். ஆனால் தற்போது அறிமுக சலுகையாக இந்த வசதியினை மக்கள் ரூ.99 க்கு பெற்று ரசிக்கலாம்.  

3 /6

இந்த இணைய சேவையானது 12 இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. இதன்படி தமிழ், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, பெங்காளி, தெலுகு, ஓரியா, போஜ்பூரி, குஜராத்தி, பஞ்சாபி, கன்னடா ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

4 /6

மொழிவாரியான பாகுபாடுகள் இன்றி, நாடுமுழுவதும் அனைத்து மக்களையும் மகிழ்ச்சிப்படுத்தும் வகையினில் இந்த இணையதள சேவை மக்களை சென்றடையவுள்ளது. 90-க்கும் அதிகமான தொலைகாடசிகளின் நேரடி ஒளிப்பரப்பினை பார்க்கவும் இந்த வலைதளம் வழிவகுக்கிறது.

5 /6

பிப்.,14 2018 முதல் துவங்கி Zee Entertainment குழுமத்தின் பொழுதுபோக்கு வலைப்பக்கத்தின் சேவையினை மக்கள் கண்ட ரசிக்கலாம். ZEE5 என்ற பெயரில் இந்த இணையதள சேவை இந்தியா முழுவதும் வழங்கப்படவுள்ளது.

6 /6

Zee குழுமத்தின் பொழுதுபோக்கு பிரிவு நிறுவனமான Zee Entertainment Enterprises Ltd-ன் ப்ரத்தியேக இணையதள சேவை தொடங்கப்பட்டது! 173 நாடுகளில் சுமார் 1.3 பில்லியன் ரசிகர்களை கொண்டுள்ள ZEEL உலகலாவிய ஊடகங்களில் முதன்மையானதாக விளங்குகிறது என்றால் மிகையள்ள!