IPL: ஐபிஎல் வரலாற்றில் இளம் வயதில் சதம் அடித்த கில்லாடி பேட்டர்கள் - லிஸ்ட் இதோ!

IPL History: ஐபிஎல் வரலாற்றில் மிக இளம் வயதிலேயே சதம் அடித்த டாப் 7 வீரர்களின் பட்டியலை இங்கு காணலாம். 

ஐபிஎல் தொடர் 2008ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் நிலையில், 17வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது.

1 /7

குவின்டன் டி காக் - இவர் 2016இல் டெல்லி டேர்டெவில்ஸ் (டெல்லி கேப்பிடல்ஸ் என பெயர் மாற்றம் பெற்றது) அணியில் விளையாடியபோது, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக சதம் அடித்தார். அப்போது அவரின் 23 ஆண்டுகள் 122 நாளாகும்.   

2 /7

பிரப்சிம்ரன் சிங் - கடந்த 2023ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இவர் விளையாடியபோது, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்தார். அப்போது அவருக்கு வயது 22 ஆண்டுகள் 276 நாளாகும்.   

3 /7

சஞ்சு சாம்சன் - 2017ஆம் ஆண்டு டெல்லி டேர்டெவில்ஸ் அணி சார்பில் சஞ்சு சாம்சன் விளையாடிக் கொண்டிருந்தபோது, ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்தார். அப்போது வயது 22 ஆண்டுகள் 151 நாளாகும்.   

4 /7

தேவ்தத் படிக்கல் - 2021ஆம் ஆண்டு ஆர்சிபி அணிக்காக தேவ்தத் படிக்கல் விளையாடிக்கொண்டிருந்த போது, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக இவர் சதம் அடித்தார். அப்போது அவருக்கு வயது 20 ஆண்டுகள் 289 நாளாகும்.   

5 /7

யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 2023ஆம் ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சதம் அடித்தார். அப்போது அவருக்கு வயது 21 ஆண்டுகள் 123 நாளாகும்.  

6 /7

ரிஷப் பண்ட் - 2018ஆம் ஆண்டு டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ரிஷப் பண்ட் விளையாடிக்கொண்டிருந்தபோது, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக இவர் சதம் அடித்தார். அப்போது அவருக்கு வயது 20 ஆண்டுகள் 218 நாளாகும்.   

7 /7

மனீஷ் பாண்டே - 2009இல் ஆர்சிபி அணிக்காக இவர் விளையாடிக்கொண்டிருந்தபோது, டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக சதம் அடித்தார். அப்போது அவருக்கு வயது 19 ஆண்டுகள் 253 நாளாகும்.