அதிகம் இல்லை... வெறும் 86 ரூபாய்க்கு வீடு வாங்கலாம்.. எங்கே தெரியுமா..!!!

ஒவ்வொருவரும் தனக்கு சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்ற கனவு நிச்சயம் இருக்கும். மக்கள் தங்கள் வாழ்நாள் வருமானத்தை வீடு வாங்க முதலீடு செய்கிறார்கள். அல்லது வீடு வாங்க கடன் வாங்கி அதனை வாழ் நாள் முழுக்க அடைக்கிறார்கள். ஆனால் வெறும் 86 ரூபாய் விலையில் இத்தாலியில் வீடு கிடைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா... 

  • Oct 29, 2020, 16:20 PM IST

ஒவ்வொருவரும் தனக்கு சொந்தமாக ஒரு வீடு வேண்டும் என்ற கனவு நிச்சயம் இருக்கும். மக்கள் தங்கள் வாழ்நாள் வருமானத்தை வீடு வாங்க முதலீடு செய்கிறார்கள். அல்லது வீடு வாங்க கடன் வாங்கி அதனை வாழ் நாள் முழுக்க அடைக்கிறார்கள். ஆனால் வெறும் 86 ரூபாய் விலையில் இத்தாலியில் வீடு கிடைக்கிறது என்றால் நம்ப முடிகிறதா... 

இதில் உள்ள ஆச்சர்யம் என்னவென்றால், யாரும் அங்கு வாழ விரும்பவில்லை. இந்த நகரத்தின் பெயர் சலேமி (Salemi), இது இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ளது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும், அங்கு 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சில வீடுகள் உள்ளன. 1968 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில், இந்த நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது.

1 /5

இத்தாலியின் சலேமி நகரில், இவ்வளவு மலிவான விலையில் வீடு கிடைக்கிறது. ஆனால், இதில் உள்ள ஆச்சர்யம் என்னவென்றால், யாரும் அங்கு வாழ விரும்பவில்லை. இத்தாலியில் உள்ள நகரத்தின் பெயர் சலேமி (Salemi), இது இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ளது. இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடமாகும், அங்கு 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சில வீடுகள் உள்ளன. 1968 ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தில், இந்த நகரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. Photo courtesy: Facebook

2 /5

கடந்த சில ஆண்டுகளில் இத்தாலியின் பல நகரங்களில் இருந்து மக்கள் இடம் பெயர்ந்து வருகின்றனர். அவற்றில் ஒன்று தான் சலேமி நகரம். மக்கள் மிகவும் மலிவு விலையில் வீடுகளை விற்க இதுவே காரணம், அதாவது ஒரு யூரோவிற்கு  வீடு விற்கப்படுகிறது. இது ஆரம்ப விலை. இதில் மிக ஆச்சர்யமான முக்கியமான விஷயம் என்னவென்றால், சாலைகள் முதல் மின்சார கட்டங்கள் மற்றும் கழிவுநீர் குழாய்கள் வரை அடிப்படை வசதிகள் மற்றும் சேவைகள் இங்கு கிடைக்கின்றன. Photo courtesy: Facebook

3 /5

முன்பு போலவே நகரங்களில் மீண்டும் மக்கள் அதிக அளவில் இங்கு குடியேற வேண்டும் என்ற முயற்சியில், குறைந்த செலவில் வீடுகள் வழங்கப்படுகின்றன என அந்த நகரத்தின் மேயர் தெரிவித்தார். ஏனெனில் இங்குள்ள மக்கள் தொடர்ந்து இந்த இடத்தை விட்டு வெளியேறி வேறு இடங்களில் குடியேறுகிறார்கள். Photo courtesy: Facebook

4 /5

மலிவான விலையில் வீடுகளை விற்கும் இந்த திட்டத்தில் அரசாங்கம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது, ஆனால் கொரோனா தொற்றுநோய்  காரணமாக இதில் தடை ஏற்பட்டுள்ளது. அனைத்து வீடுகளும் மாநகராட்சிக்கு சொந்தமானவை, எனவே அவற்றை விற்பனை செய்வதில் தாமதம் ஏதும் ஏற்படாது என்று நகர மேயர் மேலும் தெரிவித்தார். Photo courtesy: Facebook

5 /5

முன்னதாக 2018 ஆம் ஆண்டில், இத்தாலியின் ஒலோலி நகரில் வீடுகளின் விலை வெறும் ரூ .84 ஆக இருந்தது. ஓலோலி நகரத்திலும் மக்கள் தொகை மிக வேகமாக குறைந்து கொண்டிருந்தது. அப்போதும், குறைந்த விலையில் அங்கு வீடுகள் விற்கப்பட்டன. Photo courtesy: Facebook