Worship of ShaniDev on Shani Jayanti: நவகிரகங்களில் சனீஸ்வரர் மிகவும் முக்கியமானவராக கருதப்படுகிறார். சனி தேவரை வழிபடுபவது என்பது மிகவும் முக்கியமான ஒன்று. சனி ஜெயந்தி நாளன்று செய்ய வேண்டிய பரிகாரங்களை தெரிந்து கொள்வோம்...
நீதியின் கடவுளான சனி தேவரை வழிபடும் பாரம்பரியம் இந்து மத நம்பிக்கைகளுடையது. சனி தேவரை வழிபடுவது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தருகிறது. பிரச்சனைகளும் தீரும்...
நமது பாவ, புண்ணிய செயல்களுக்கு ஏற்ப பலன்களை கொடுப்பவர் சனி பகவான். சனீஸ்வரர் வைகாசி மாத அமாவாசை நாளன்று பிறந்தவர் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வைகாசி மாத அமாவாசை 2024 ஜூன் மாதம் 6ம் தேதி, வியாழக்கிழமையன்று வருகிறது. இந்த நாள் சனி பகவானை வணங்குவதற்கு சிறப்ப்பான நாளாகும்
ரோகிணி நட்சத்திர நாளான ஜூன் மாதம் ஐந்தாம் நாள் சனீஸ்வரரின் பிறந்தநாள் வருகிறது. நிழல் கிரகமான சனி பகவானை சாந்திப்படுத்த சில பரிகாரங்களைத் தெரிந்துக் கொள்வோம்
சனி ஜெயந்தி நாளன்று பெண்கள் வட் சாவித்ரி என்ற விரதத்தைக் கடைபிடிப்பது வட இந்தியாவில் வழக்கமான ஒன்று. இந்த விரதம் இருப்பவர்களுக்கு சனீஸ்வரரின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை
சனிபகவானுக்கு உகந்த நல்லெண்ணெய் மற்றும் வெல்லம் ஆகியவற்றை தானம் கொடுப்பது வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரும்...
சனீஸ்வரருக்கு உகந்த சனி ஜெயந்தியன்று, ஏழரை நாட்டு சனி நடப்பவர்கள் இரும்பு பொருட்களை தானமாக கொடுப்பதும், இரும்பு சட்டியில் விளக்கேற்றுவதும் நல்லது
சனி தேவன் சிவபெருமானின் சிறந்த பக்தர் என்பதால், சனி ஜெயந்தி நாளில் சிவபெருமானை வணங்குவதன் மூலம் வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் நீங்கும்.
சிவன் கோவிலில் இருக்கும் அரச மரத்தின் கீழ் ஐந்து தீபங்கள் ஏற்ற வேண்டும். ஐந்து தீபங்களிலும் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி அரச மரத்தடியில் வைத்து வணங்குவது வாழ்வில் சுபிட்சத்தைக் கொண்டு வந்து சேர்க்கும்