பார்ப்போரை கவர்ந்திழுக்க வேண்டுமா... பெண்கள் பின்பற்ற வேண்டிய 5 டிப்ஸ்!

Lifestyle Tips In Tamil: பெண்கள் தங்களை தோற்றத்தின் மூலம் பலரையும் ஈர்க்க வேண்டும் என நினைத்தால் இந்த 5 விஷயங்களை பின்பற்றினால் போதுமானது. 

  • Sep 09, 2024, 21:06 PM IST

இவை அனைத்தும் பெண்களின் தன்னம்பிக்கையை பொதுவெளியில் அதிகரிப்பதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

   
 

 

 

1 /8

பெண்கள் மீது சமூகத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், பாகுபாடுகள் ஆகியவற்றை வெற்றிகரமாக தாண்ட தன்னம்பிக்கை மிகவும் முக்கியம் ஆகும்.   

2 /8

அந்த வகையில், தோற்றத்தில் கவனம் எடுத்து இந்த 5 விஷயங்களை செய்யும்போது உங்களின் தன்னம்பிக்கை பல மடங்கு உயரும். தன்னம்பிக்கை வந்துவிட்டால் நீங்கள் நினைக்கும் அத்தனையும் கைக்கூடி வரும். அந்த வகையில், பெண்கள் பின்பற்ற வேண்டிய அந்த 5 விஷயங்கள் குறித்து இங்கு காணலாம்.   

3 /8

தலைமுடியில் கவனம்: தலைமுடிக்கு ஷாம்பூ, கண்டிஷனர் போட்டு உங்களின் தலைமுடியின் தன்மைக்கு ஏற்றவாரு சீராக வைத்துக்கொள்ளவும். அடிக்கடி முடியை சுத்தப்படுத்துவதும், ஆழமாக கண்டிஷனிங் செய்வதும் தலைமுடி எப்போதும் ஈரப்பதத்துடனும், பளபளப்புடனும் இருக்கும்.   

4 /8

மற்ற பாகங்களின் முடிகளையும் சீர்படுத்தவும்: முகப்பொழிவை அதிகரிக்க கண்ணிமையை சீராக வைத்துக்கொள்வதும் முக்கியம். உடலில் மற்ற பாகங்களில் உள்ள முடிகளை பராமரிப்பதும் உங்கள் முடிவுதான். வேக்ஸிங், ஷேவிங் மூலம் கால், கைகளில் உள்ள முடிகளை பக்குவமாக அகற்றலாம். அதேபோல், நகத்தை முறையாக வெட்டி, பாலிஷாக வைத்துக்கொள்வதும் முக்கியம்.  

5 /8

பல்லையும் கவனியுங்கள்:  பல்லை சுத்தமாக வைத்துக்கொள்ள தினமும் 2 முறை பல் துலக்கவும். சாப்பிட்ட உடன் வாயை கொப்பழிக்கவும். இது வாய் துர்நாற்றத்தை தடுக்கும். சுகர் இல்லாத பப்பிள் கம் உள்ளிட்டவற்றை விரைவான பலன்களுக்கு பயன்படுத்தலாம்.   

6 /8

சரும பாதுகாப்பு: வாரத்திற்கு ஒருநாள் அதாவது சனி அல்லது ஞாயிறு நீங்கள் ரிலாக்ஸாக இருக்கும் நேரத்தில் சருமத்திற்காக நீங்கள் செலவிடலாம். இதுகுறித்து வல்லுநர்களிடம் ஆலோசனை பெற்று அதன் பின் மேற்கொள்ள வேண்டும்.   

7 /8

வியர்வை: அதேபோல், உடற்பயிற்சி உள்ளிட்ட வேலைகளுக்கு பின் உடலில் அதிக வியர்வை ஏற்பட்டால் உங்களின் ஆடைகளை மாற்றிக்கொள்வதும் நல்லது. அடிக்க குளிப்பதும், வெளியில் செல்லும் டியோடிரன்ட் உள்ளிட்டவை பயன்படுத்தி வியர்வை நாற்றத்தை முறியடிக்கலாம்.   

8 /8

பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டவை. இதனை Zee News உறுதிப்படுத்தவில்லை.