Zydus Cadila வழங்கும் ZyCoV-D: கொரோனா 3வது அலையிலிருந்து குழந்தைகளை காக்குமா.!!

ஜூலை மாதம்,  ZyCoV-D கோவிட் -19 புதிய டெல்டா மாறுபாட்டிற்கு எதிராக மிக திறமையாக செயலாற்றியதாக Zydus Cadila தெரிவித்தது. 

இந்தியா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 20, 2021) ஜைடஸ் காடிலாவின் COVID-19 தடுப்பூசி 'ZyCoV-D' க்கு அவசர பயன்பாட்டிற்கான ஒப்புதலை வழங்கியது, இது 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான கொரோனா வைரஸுக்கு எதிரான உலகின் முதல் டி.என்.ஏ. தடுப்பூசியாகும். 

1 /7

ஜைடோஸ் காடிலா ஜூலை மாதத்தில் ZyCoV-D இன் அவசர பயன்பாட்டு அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்திருந்தது. இது நாடு முழுவதும் 28,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் கடைசி கட்ட சோதனையில் 66.6% செயல்திறன் விகிதத்தை அடிப்படையாகக் கொண்டது. இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட COVID-19 தடுப்பூசி பரிசோதனையில் இது மிக அதிக அளவாகும் என்று கூறப்படுகிறது. மூன்றாவது அலை குழந்தைகளை தாக்கும் என்ற  அச்சம் நிலவி வரும் சூழலில், குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கான இந்த தடுப்பூசி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. (புகைப்படம்: Zydus Cadila)

2 /7

ZyCoV-D என்பது மூன்று டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி ஆகும். இது முதலில் 0வது நாள், பின்னர் 28 வது நாளில் மற்றும் 56 வது நாளில் வழங்கப்படும். (புகைப்படம்: Zydus Cadila)

3 /7

ZyCoV-D என்பது ஊசி அல்லாத கோவிட் -19 தடுப்பூசி ஆகும். இது தி பார்மா ஜெட் (The PharmaJet), என்னும் ஊசி-இல்லாத அப்ளிகேட்டரைப் பயன்படுத்தி வழங்கப்படுகிறது. இதன் மூலம் வலியற்ற இன்ட்ராடெர்மல் தடுப்பூசி கொடுக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதில் பெரிதும் உதவும். (புகைப்படம்: IANS)

4 /7

இது பிளாஸ்மிட் டிஎன்ஏ தடுப்பூசியாக இருப்பதால், திசையன் சார்ந்த நோய் எதிர்ப்பு சக்தியுடன் தொடர்புடைய எந்த பிரச்சனையும் ZyCoV-D காரணமாக ஏற்படுவதில்லை. பிளாஸ்மிட் டிஎன்ஏ தடுப்பூசி, வைரஸில் ஏற்படும் பிறழ்வுகளைச் சமாளிக்க புதிய கட்டமைப்புகளை விரைவாக உருவாக்குகிறது என்பதால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும். (புகைப்படம்: Pixabay)  

5 /7

ZyCoV-D 2-8 டிகிரி டிகிரி செண்டிகிரேடில் சேமிக்கப்படுகிறது. அதோடு, குறைந்தது மூன்று மாதங்களுக்கு 25 டிகிரி செண்டிகிரேடில்  வெப்பநிலையில் நல்ல நிலைத்தன்மையைக் கொண்டதாக இருக்கிறது.

6 /7

Zydus Cadila நிறுவனம் ஆண்டுதோறும் 10-12 கோடி ZyCoV-D தடுப்பூசி மருந்துகளை தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

7 /7

பாரத பயோடெக்கின் கோவாக்சினுக்குப் பிறகு இந்தியாவில் அவசர அங்கீகாரம் பெற்ற உள்நாட்டின் தயாரிக்கப்பட்ட இரண்டாவது கொரோனா தடுப்பூசி ஆகும். இது பயோடெக்னாலஜி துறையுடன் இணைந்து உருவாக்கப்பட்டது. ZyCoV-D ஆனது இந்தியாவில் ஒப்புதல் பெறும் ஆறாவது COVID-19 தடுப்பூசியாகும். (புகைப்படம்: ஏஎன்ஐ)