காதலி ஏமாற்றுவதை கண்டுபிடித்தவுடன் என்ன செய்ய வேண்டும்?

காதலிக்கும்போது நீங்கள் ஏமாற்றப்படுவதாக உணரும் சமயத்தில் என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

 

காதலிக்கும்போது திடீரென காதலி ஏமாற்றுவதை நீங்கள் கண்டுபிடித்துவிட்டால், அந்த சூழலை எப்படி கையாள வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்

1 /9

காதலிக்கும்போது திடீரென உங்கள் இருவருக்கு இடையே சில விஷயங்களில் முரண்பாடு எழலாம். இது சாதாரண விஷயம் தான். இருவரும் குறிப்பிட்ட நாட்கள் இடைவெளியில் ஆசுவாசப்படுத்திக் கொண்டு மீண்டும் பேசினால் எல்லாம் சரியாகிவிடும். 

2 /9

ஆனால், உறவு திசைமாறிச் சென்றால் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். சில சமயங்களில் எந்த பிரச்சனையும் இல்லாத நேரத்தில் கூட திடீரென காதலி பிரேக்அப் செய்யப்போவதாக அறிவிக்கும் நிகழ்வுகளும் உண்டு.

3 /9

இங்கு தான் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். காதலி பிரேக்அப் செய்வதற்கு முன்பே அவரின் நடத்தையில் நிச்சயம் மாற்றம் இருக்கும். அதனை நீங்கள் கவனிக்காவிட்டால் பிரேக்அப் உங்களை பாதிக்கவே செய்யும். 

4 /9

ஒருவேளை உங்களை காதலி ஏமாற்றுவதை கண்டுபிடித்துவிட்டீர்கள், அது காதலிக்கு தெரியாது என்ற சூழலில் இருந்தால் அந்த இடத்தில் அவசரப்படக்கூடாது. ஏனென்றால் சில சமயங்களில் தன்னை அறியாமல் கூட தவறு செய்யலாம். அதனை எடுத்துக்கூறும்போது புரிந்து கொள்வார்கள்.

5 /9

தவறை உணர்ந்து மீண்டும் உங்களுக்கு உண்மையாக இருக்க முயற்சிப்பார்கள். அதேநேரத்தில் அந்த விஷயத்தை நீங்கள் பெரிதுபடுத்தி கோபத்தை வெளிக்காட்டினால் அவர்கள் உங்களை விட்டு செல்கிறேன் என்பதை நொடியும் தாமதிக்காமல் அறிவிப்பார்கள்.

6 /9

இந்த இடத்தில் நீங்கள் யோசிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் காதலி உங்கள் வாழ்க்கையில் திட்டவட்டமாக வேண்டுமா? வேண்டாமா? என்பதை சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். அவர்கள் தெரியாமல் செய்த தவறு என ஒப்புக் கொண்டால் உங்களால் ஏற்றுக் கொள்ள முடியுமா?.

7 /9

காதலி தெரிந்தே தவறு செய்திருந்தாலும், அதனை நீங்கள் எடுத்துக் கூறும்போது அந்த தவறை உணர்ந்து உங்களுடன் இனி இருப்பாரா? என்பதையெல்லாம் யோசியுங்கள். இனி உங்களுடன் இருப்பார் என்றாலும், இருக்கமாட்டார் என்றாலும் நீங்கள் செய்ய வேண்டியது ஒரே ஒரு விஷயம் தான்.

8 /9

கோபத்தை வெளிக்காட்டாமல் தன்மையாக உங்களின் விருப்பத்தை கூறுங்கள். சேர்ந்து பயணிக்கலாம் என்றால் இனி இப்படி செய்யாதே என்றும், சேர்ந்து பயணிக்க முடியாது என்றால் இனி பிரிந்து செல்வோம் என்று கூறி, அதற்கான தெளிவான காரணத்தையும் எடுத்துக் கூறிவிடுங்கள். 

9 /9

இந்த பொறுமை இருந்தால் உங்களாலும் குறிப்பிட்ட நாட்களில் காதலி பிரிந்த சோகத்தில் இருந்து மீண்டு வர முடியும். அதன்பின் வாழ்க்கையின் அடுத்தடுத்த கட்டங்களை நோக்கி பயணிக்க முடியும்.