100% சார்ஜ் ஆன பிறகு, போனை சார்ஜிங்கில் வைத்தால் என்ன ஆகும்? ஸ்மார்ட்ஃபோன் ஓவர் சார்ஜிங்

Phone Charger Tech Tips : ஸ்மார்ட்போன்கள் நமது வாழ்க்கையில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டது. போன் என்பது பேசுவதற்காக அல்லது தகவல் தொடர்புக்காக என்ற நிலை மாறிய நிலையில், போனின் பேட்டரி சார்ஜிங் தொடர்பான முக்கியத் தகவல்களைத் தெரிந்துக் கொள்வோம்...

1 /7

ஃபோன் முழுவதுமாக சார்ஜ் ஆன பிறகும் சார்ஜிங்கில் இருந்தால் என்ன ஆகும்? இந்த கேள்விக்கான பதில் இந்த கட்டுரை....

2 /7

போனில் சார்ஜ் போகாமல் இருக்க ஸ்மார்ட்போன் முழுவதுமாக சார்ஜ் செய்யப்பட வேண்டும் என்று நினைக்கிறோம். அதோடு, சார்ஜரில் போட்ட போனை நீண்ட நேரம் அப்படியே விட்டுவிடுவதும் சகஜமாகிவிட்டது. 100% சார்ஜ் ஆன பிறகும் அதை சார்ஜருடன் இணைப்பது உங்கள் போனின் பேட்டரியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். 

3 /7

ஓவர்சார்ஜிங், ஃபோன் பேட்டரியில் உடனடியாக எந்த விளைவையும் ஏற்படுத்தாது, ஆனால் அவ்வாறு செய்வது தொலைபேசியின் பேட்டரி ஆயுளை பாதிக்கிறது

4 /7

சார்ஜ் முழுமையாக ஆன பிறகும், ஃபோனை சார்ஜிங்கில் வைத்திருப்பதால், ஃபோன் சூடாகும்.   

5 /7

ஒவ்வொரு முறையும் உங்கள் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் செய்துவிட்டு, அதை டிஸ்சார்ஜ் செய்யும்போது, ​​அது ஒரு பேட்டரி சுழற்சி என்படுகிறது. அதிகப்படியான பேட்டரி சுழற்சிகள் பேட்டரி திறனைக் குறைக்கலாம்.

6 /7

ஸ்மார்ட்போன் பேட்டரியை 80% வரை சார்ஜ் செய்வது நல்லது. இது பேட்டரி ஆயுளை நன்றாக வைத்திருக்கிறது. மேலும், தொலைபேசியை முழுவதுமாக டிஸ்சார்ஜ் செய்ய விடாதீர்கள். பேட்டரி 20% ஆக இருக்கும்போது, ​​அதை சார்ஜிங்கில் வைக்கவும்.

7 /7

வெப்பமான இடத்தில் வைத்து ஃபோனை சார்ஜ் செய்ய வேண்டாம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து போனை சார்ஜ் செய்வதையும் தவிர்க்கவும்.