Vodafone Idea புதிய ரீசார்ஜ் அறிவிப்பு; ஜியோ, ஏர்டெல் கதி என்ன

Vi தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ .75 இலவச ரீசார்ஜ் இலவசமாக வழங்கி வருகிறது

வோடபோன் ஐடியா தனது வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல புதிய மலிவான திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி Vi தற்போது குறைந்த வருமான வாடிக்கையாளர்களுக்கு இலவச காலிங் மற்றும் டேட்டாவை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன் முழு விவரத்தை இங்கே காண்போம். 

 

1 /4

வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ .75 ரீசார்ஜ் (Recharge Plans) இலவசமாக வழங்கி வருகிறது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் விதிக்கபட்ட ஊரடங்கில் ​​Vi இன் பல வாடிக்கையாளர்கள் ரீசார்ஜ் செய்வதில் சிரமத்தை எதிர்கொண்டனர். இந்த சிரமத்தை நீக்கும் விதமாக Vi நிறுவனம் இந்த புதிய சலுகையை அறிவித்துள்ளது.

2 /4

இந்த சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் Vi இலிருந்து Vi நெட்வொர்க்கிற்கு அழைக்க 50 நிமிடங்கள் பெறுகிறார்கள். மேலும் 50MB டேட்டாவும் இதில் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் செல்லுபடியாகும் நாட்கள் 15 ஆகும். ரீசார்ஜ் செய்ய முடியாத வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை கிடைக்கிறது. Vi இந்த சலுகைக்கு Unlock 2.0 என்று பெயரிட்டுள்ளது.

3 /4

இந்த சலுகையை நீங்கள் பெறவேண்டுமானால் நீங்கள் 44475 # ஐ டயல் செய்ய வேண்டும் அல்லது மிஸ்ட் கால்  எண் 121153 ஐ அழைக்க வேண்டும். இதனுடன், நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு செய்தி அனுப்புவதன் மூலமும் இது குறித்த தகவல்களை அளிக்கிறது.   

4 /4

மறுபுறம் Vi நிறுவனம் RC79 என்ற காம்போ திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது, இதில் 200 எம்பி தரவு ரூ .64 டாக் டைமுடன் கிடைக்கிறது. இந்த திட்டத்தின் மூலம், ரூ .128 டாக் டைம் தற்போது சலுகையின் கீழ் கிடைக்கிறது. இதன் வேலிடிட்டி  28 நாட்கள் ஆகும்.