கோலிவுட்டில் பல படங்கள் வெளிநாட்டில் படமாக்கப்பட்டிருந்தாலும், சில படங்கள் மட்டுமே ரஷ்யாவில் படமாக்கப்பட்டுள்ளன.
ரஷ்யாவின் நகரம் முதல் இயற்கை அழகு வரை என அந்நாட்டில் படமாக்கப்பட்ட 5 தமிழ் படங்கள்.
தாம் தூம்; ஜெயம் ரவி நடிப்பில் வெளியான திரைப்படம் தாம் தூம். பாதி படம் ரஷ்யாவில் படமாக்கப்பட்ட நிலையில் படத்தின் நடுவே இயக்குநர் ஜீவா காலமானார். எஞ்சிய படப்பிடிப்புகளை இயக்குநர் ஜீவா மனைவி, உதவி இயக்குநர் ஜி.கே.மணிகண்டன் மற்றும் பி.சி.ஸ்ரீராம் ஆகியோர் நடத்தி முடித்தனர்.
அக்னி சிறகுகள்; இயக்குநர் நவீன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'அக்னி சிறகுகள்'. அருண் விஜய், விஜய் ஆண்டனி, அக்ஷரா ஹாசன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் பெரும்பகுதி ரஷ்யாவில், உறைபனியில் படமாக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் சூட்டிங் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றினை அண்மையில் இயக்குநர் நவீன் சமூகவலைதளங்களில் வெளியிட்டு இருந்தார்.
கோப்ரா; சியான் விக்ரம் நடித்த திரைப்படம் கோப்ரா. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் பல்வேறு நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு ரஷ்யாவில் சில காட்சிகள் படமாக்கப்பட்டபோது, கொரோனா காரணமாக படக்குழு பாதியிலேயே இந்தியா திரும்பியது. பின்னர் மீண்டும் ரஷ்யா சென்ற கோப்ரா குழு படத்தில் எடுக்க வேண்டிய காட்சிகளை படமாக்கியது.
பீஸ்ட்: இளைய தளபதி வஜய் நடிப்பில் விரைவில் ரிலீஸாக இருக்கும் திரைப்படம் பீஸ்ட். படத்தின் முக்கிய காட்சிகள் சூட்டிங் தொடங்கிய உடன் ஜார்ஜியாவில் படமாக்கப்பட்டது. முதல் அலை அச்சுறுத்தலுக்கு நடுவே சூட்டிங் நடைபெற்ற நிலையில், சில காட்சிகள் ரஷ்யாவில் படமாக்கப்பட்டன. ரஷ்யா மற்றும் ஜார்ஜியாவில் எடுக்கபட்ட காட்சிகள் மிரட்டலாக இருக்கும் என கூறப்படுகிறது. கோடை விருந்தாக திரைக்கு வர உள்ளது.
ரஷ்யாவில் படமாக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று அண்மையில் வெளியான வலிமை திரைப்படம். படத்தில் இடம்பெறும் முக்கிய காட்சியான பைக் சேஸிங் காட்சிகளை ரஷ்யாவில் படமாக்க வேண்டும் என்பதில் படக்குழு தீவிரமாக இருந்தது. லாக்டவுன் கட்டுப்பாடுகளால் அந்த சீன் எடுப்பதில் காலதாமதமானது. கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர், ரஷ்யா சென்ற படக்குழு பைக் சேஸிங் காட்சிகளை படமாக்கியது.