கூகுள் குரோம் பிரவுசரை உடனே அப்டேட் செய்யுங்கள்..! ஏன் தெரியுமா?

கூகுள் குரோம் பிரவுசர்கள் உடனே அப்டேட் செய்ய வேண்டும். ஏன் என்பதை பார்க்கலாம்.

 

1 /7

மேகோஸ், விண்டோஸ் மற்றும் லினக்ஸில் அதன் குரோம் தேடுபொறிக்கான முக்கியமான பாதுகாப்பு அப்டேட்டை கூகுள் சமீபத்தில் வெளியிட்டது.   

2 /7

அனைத்து Chrome பயனர்களும் தங்கள் உலாவிகளை உடனடியாக புதுப்பிக்குமாறு கூகுள் வலியுறுத்தியுள்ளது.  

3 /7

CVE-2023-6345 என்ற பிழையை சரி செய்து கூகுள் அப்டேட்டை வெளியிட்டிருக்கிறது. இந்த அப்டேட் செய்யவில்லை என்றால் உங்கள் ஸ்மார்ட்போன் ஹேக்கிங் செய்யப்பட வாய்ப்புள்ளது.  

4 /7

CVE-2023-6345 பிழையைப் பற்றிய கூடுதல் விவரங்களை Google வழங்கவில்லை. இது Google -ன் அச்சுறுத்தல் ஆராய்ச்சியாளர்கள் குழுவில் (TAG) பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்களால் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது.   

5 /7

ஒருவேளை நீங்கள் கூகுள் பிரவுசரை அப்டேட் செய்யவில்லை என்றால் டேட்டா திருட்டில் நீங்கள் சிக்கிக் கொள்ள வாய்ப்பு இருக்கிறது. அப்டேட் செய்யாத Chrome தேடுபொறி பாதுகாப்பையும் யூசர்களின் முக்கியமான தகவலையும் கசியவிடும்.   

6 /7

மோசடி செய்பவர்கள் உங்கள் சாதனத்திற்கான அணுகலைப் பெற்றால், அவர்களால் உங்கள் மொபைலை முழுமையாக கட்டுப்படுத்தப்படும் நிலைக்கு கூட கொண்டு செல்ல முடியும்.  

7 /7

நீங்கள் பாதுகாப்பாக இருக்க ஒரே வழி, உடனடியாக உங்கள் ஸ்மார்ட்போன் அல்லது சிஸ்டத்தில் குரோமை அப்டேட் செய்யுங்கள்.