Guinness World Records: பிறப்பிலேயே வித்தியாசமான சாதனை புரிந்த அற்புத மனிதர்கள்

இயற்கையின் படைப்பு மிகவும் வித்தியாசமானது. ஒருவரைப் போல் மற்றொருவர் இருக்கமாட்டார், அப்படியே இருந்தாலும் ஏதாவது ஒரு சிறிய வித்தியாசமாவது இருக்கும். பிறக்கும்போதே, சிலர் இயற்கையின் அதிசயமாக மிகவும் வித்தியாசமாக இருப்பார்கள்.  

இந்த உலகம் அற்புதங்கள் நிறைந்தது. சிலர் தங்கள் உடலின் சில விசித்திரமான அம்சங்களால் உலகம் முழுவதும் பிரபலமாக உள்ளனர். இந்த விசித்திரமான மனிதர்களைப் பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். இவர்கள் கின்னஸ் சாதனை பட்டியலிலும் இடம் பெற்றுள்ளனர்… 

Also Read | உலகின் மிக மர்ம கிராமமான ‘இறந்தவர்களின் நகரம்’

1 /5

இந்தியாவின் நாக்பூரில் வசிக்கும் ஜோதி ஆம்கே உலகின் மிக குள்ளமான பெண். அவர் 63 சென்டிமீட்டர் உயரம் அதாவது 2.07 அடி மட்டுமே இருக்கிறார். ஜோதியின் எடை 5 கிலோ மட்டுமே.

2 /5

சுல்தான் கோசன் உலகின் மிக உயரமான மனிதர். அவரது உயரம் 8 அடி 2.82 அங்குலம். அவர்களின் கைகளும் கால்களும் மிக நீளமானவை. அவரை யாரும் கண்ணோடு கண் நேரடியாக பார்க்க முடியாது. மிகவும் உயர்ந்த மனிதர். Photo Credit:  Instagram/sultankosen47

3 /5

மெஹ்மெட் ஜியரெக் உலகின் மிகப்பெரிய மூக்குக்கு சொந்தக்காரர். மெஹ்மெட் ஜியரெக் என்ற நபரின் மூக்கின் நீளம் 8.8 செ.மீ. உலகின் மிக நீளமான மூக்கு கொண்டவர் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளார் மெஹ்மட் ஜியெரெக்   Photo: Credit: Instagram/ கின்னஸ் உலக சாதனைகள்

4 /5

Xie Qiuping என்ற இந்தப் பெண் உலகின் மிக நீளமான கூந்தலைக் கொண்டுள்ளார். அவருக்கு 18 அடி நீள கூந்தல் இருக்கிறதாம்! 1973 முதல் அவர் தனது தலைமுடியில் கத்தரிக்கோலை வைத்ததேயில்லையாம்! உலகின் மிக நீளமான கூந்தல் வைத்திருப்பவர் என்ற  கின்னஸ் சாதனையை படைத்துள்ளார்  Xie Qiuping.

5 /5

14 வயதான மேக்ஸ்வெல் டே சிலந்தியைப் போல எந்த திசையிலும் தனது கால்களை திருப்பக்கூடியவர். மேக்ஸ்வெல் தனது வலது பாதத்தை 157 டிகிரி அளவுக்கு சுழற்றுவார். அதேபோல, இடது பாதத்தை 143 டிகிரி அளவுக்கு சுழற்றக்கூடியவர் முடியும் (World's Largest Foot Rotation). Photo: Credit: Instagram/ கின்னஸ் உலக சாதனைகள்