BOMB Cyclone: அமெரிக்காவில் எங்கும் வெள்ளைப் பனி! உறைந்தது நயாகரா வீழ்ச்சி!

பாம்ப் பனி சூறாவளி அமெரிக்கா: அமெரிக்காவின் 60 சதவீத மக்கள் பனி புயலின் காரணமாக பேரழிவை எதிர்கொண்டுள்ளனர். எல்லா இடங்களிலும் வெள்ளைப் பனி மட்டுமே காணப்படுகிறது.  கிறிஸ்துமஸ் விடுமுறையை முன்னிட்டு ஏற்பட்டுள்ள பனிப்புயல் காரணமாக வட அமெரிக்காவில் குளிர் உச்சத்தில் உள்ளது. மேற்கு கனடாவில் வெப்பநிலை மைனஸ் -53 டிகிரி செல்சியஸாக (மைனஸ் 63 பாரன்ஹீட்) குறைந்துள்ளது. அதே நேரத்தில், மின்னசோட்டாவில் மைனஸ் 38 ஆகவும், டல்லாஸில் மைனஸ் 13 டிகிரி செல்சியஸாகவும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

1 /5

அமெரிக்காவின் மிகப்பெரிய நயாகரா நீர்வீழ்ச்சியின் ஒரு பகுதி முற்றிலும் உறைந்து போயுய்ள்ளது. இங்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை. "நூற்றாண்டின் பயங்கர பனிப்புயல்" மக்களின் வாழ்க்கையை புரட்டி போட்டுள்ளது.

2 /5

வடக்கு புளோரிடாவிலும் பனிப்பொழிவு தொடர்கிறது. புயல் குறித்து அமெரிக்க தேசிய வானிலை மையம் எச்சரித்துள்ளது, இந்த வகை குளிர் சில நிமிடங்களில் தோலில் பாதிப்பை ஏற்படுத்தும். குளிர் காரணமாக மரணம் கூட ஏற்படலாம்.  

3 /5

வரலாறு காணாத பனிப்பொழிவு மற்றும் குளிர் காலநிலை அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் எல்லா இடங்களிலும் ஒரு வெள்ளை பனி படலம் தெரியும். சாலைகளில் முழங்கால் அளவு பனி படர்ந்துள்ளது. இந்த பனிப்புயல் அமெரிக்க வரலாற்றில் மிகவும் ஆபத்தான புயல் என்று வர்ணிக்கப்படுகிறது.  

4 /5

அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளில் பரவிய இந்த புயல் காரணமாக குறைந்தது 59 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பனிப்புயல் காரணமாக வெப்பநிலை தொடர்ந்து குறைந்து வருகிறது. நியூயார்க் போன்ற பெருநகரங்கள் முடங்கியுள்ளன. சாலைகள் மூடப்பட்டுள்ளன, ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளன மற்றும் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.  

5 /5

அமெரிக்காவின்மினியாபோலிஸ், டெலாவேர், இல்லினாய்ஸ், இந்தியானா, கென்டக்கி, மேரிலாந்து, மிச்சிகன், நியூ ஜெர்சி, வட கரோலினா, ஓஹியோ, பென்சில்வேனியா, டென்னசி, வர்ஜீனியா, மேற்கு வர்ஜீனியா, வாஷிங்டன் டிசி போன்ற இடங்கள் அதிகம் பாதிக்கப்பட்ட இடங்கள்.