தெலுங்கு நடிகர் நிதின் தனது காதலி ஷாலினியை நேற்று திருமணம் செய்து கொண்டார்...!
தயாரிப்பாளர் சுதாகர் ரெட்டியின் மகன் நடிகர் நிதின், தெலுங்கு திரையுலகில் முக்கிமான நடிகர்களில் ஒருவரான இவர் தனது நீண்ட நாள் காதலி ஷாலினியை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
இவர்களின் திருமணம் ஏப்ரல் 16 ஆம் தேதி நடைபெற இருந்தது. இதற்காக துபாயில் திருமணம் ஏற்பாடுகள் வெகு விமரிசையாகத் திட்டமிட்டிருந்தனர்.
ஆனால், ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அனைத்துத் திட்டங்களும் கடைசியில் கைவிடப்பட்டன. மேலும், தனது திருமணத்தையும் ஒத்திவைத்தார் நிதின்.
இந்நிலையில், கடந்த 22 ஆம் தேதி அன்று நிதின் -ஷாலினியின் நிச்சயதார்த்தம் அவரது வீட்டில் நடைபெற்றது. இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டனர்.
இதை தொடர்ந்து, நிதின் - ஷாலினியின் திருமணம் நேற்று (ஜூலை 26) இரவு 8:30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ஃபலக்கனுமா பேலஸில் நடைபெற்றது.