இந்த ஆண்டு மாஸாக கம்பேக் கொடுத்த தமிழ் ஹீரோக்களின் பட்டியல் இதோ

2023ஆம் ஆண்டு நிறைவு பெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், தற்போது 2023 ஆம் ஆண்டில் செம கம்பேக் கொடுத்த ஹீரோக்கள் குறித்த லிஸ்ட்டை இதில் பார்க்கலாம்.

கோலிவுட்டில் 2023ஆம் ஆண்டு ஏராளமான படங்கள் வெளியாகின. அதிலும் இந்த ஆண்டு ரஜினிகாந்த், விஜய், விஷால் உள்ளிட்டோரின் படங்கள் வெளியாகின. அவற்றில் சில ஹீரோக்களுக்கு கம்பேக்காகவே இந்த வருடம் அமைந்தது. அதுகுறித்து இதில் பார்க்கலாம்.

1 /5

ரஜினிகாந்த்: நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்த ஜெயிலர் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மெகா ஹிட்டாகி உலகம் முழுவதும் 700 கோடி ரூபாயை அள்ளியது. இதன் மூலம் இந்த வருடம் ரஜினிக்கு தரமான கம்பேக்காக அமைந்தது.  

2 /5

அஜித்: ஹெச்.வினோத் இயக்கத்தில் மூன்றாவது முறையாக இணைந்து அஜித் அவர்கள் துணிவு படத்தை நடித்தார். இந்த படம் வசூல் வேட்டை நடத்தியது. இதன் காரணமாக அஜித்துக்கும் இந்த வருடம் தரமான கம்பேக் வருடமாக அமைந்தது.  

3 /5

சிவகார்த்திகேயன்: டாக்டர், டான் ஆகிய இரண்டு படங்கள் வரிசையாக 100 கோடி ரூபாய் கிளப்பில் சேர்ந்தது. ஆனால் பிரின்ஸ் படம் படுதோல்வியை சந்தித்தது. இதனிடையே மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் படத்தில் நடித்து, மாபெரும் கம்பேக்கை கொடுத்தார்.  

4 /5

விஷால்: ஆதிக் ரவிச்சந்திரனுடன் மார்க் ஆண்டனி படத்தில் இணைந்து நடித்த விஷால். இந்த படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் மூலம் நடிகர் விஷால் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மாஸ் கம்பேக் கொடுத்தார் என்றே கூற வேண்டும்.  

5 /5

சித்தார்த்: அருண்குமார் இயக்கத்தில் சித்தார்த் நடித்த படம் சித்தா. சின்ன பட்ஜெட்டில் உருவாகியிருந்த இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது. இதன் மூலம் ஒரு ஹிட் கூட கொடுக்காமல் இருந்த சித்தார்த்தூக்கு அற்புதமான கம்பேக் படமாக அமைந்தது.