வெப்சீரிஸில் ஆபாச காட்சிகளில் நடித்தது ஏன்? என தமன்னா விளக்கம்

தமிழில் ஜெயிலர், அரண்மனை 4 மற்றும் தெலுங்கில் போலா சங்கர் போன்ற படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. அதோடு தனது காதலர் விஜய் வர்மாவுடன் இணைந்து லஸ்ட் ஸ்டோரி 2 என்ற ஆந்தாலஜி படத்திலும் நடித்திருக்கிறார். 

 

1 /5

வருகிற 29ஆம் தேதி அந்த படம் வெளியாகிறது. இந்த படத்தில் பல அந்தரங்க காட்சிகளில் தமன்னா நடித்திருக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதற்கு முன்னதாகவே, ஜி கர்தா என்ற வெப் சீரிஸ் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.   

2 /5

இதில் நடிகர் சுஹைல் நய்யாருடன், தமன்னா அந்தரங்க காட்சிகளில் நடித்திருப்பதை பார்த்து ரசிகர்கள் பலத்த அதிர்ச்சி அடைந்தார்கள். இது சோசியல் மீடியாவில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானது.  

3 /5

இந்த தொடரில் தான் அப்படி நடித்தது ஏன்? என்பது குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் தமன்னா. அதில், இந்தத் தொடரானது பள்ளி பருவத்து காதலை விளக்குவதாக அமைந்திருக்கிறது.   

4 /5

அந்த அடிப்படையில் சுஹைல் நய்யாருடன் இருக்கும் உறவை விளக்கவும், கதை ஓட்டத்தை வலுப்படுத்தவும் அது போன்ற காட்சி அவசியப்பட்டது. ரிலேஷன்ஷிப் கதைகளில் இது போன்ற நெருக்கமான காட்சிகள் முக்கியமானவை.   

5 /5

அதன் காரணமாகவே அந்த காட்சியில் என்னால் நடிக்க முடிந்தது என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.